1. Home
  2. Cinema News

ஒருத்தனை போய் கொன்னுட்டு வா!.. எஸ்.ஜே.சூர்யாவிடம் சொன்ன பாரதிராஜா!..

சினிமாவில் வாய்ப்பு தேடியபோது பாரதிராஜாவிடம் ஏற்பட்ட அனுபவம் பற்றி எஸ்.ஜே.சூர்யா ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

திரைத்துறையில் நடிகர்களுக்குகு பின் கவனிக்கப்படுபவர் இயக்குனர்கள் மட்டுமே. ஏனெனில் ஒரு நடிகரை உருவாக்குபவரே அவர்தான். இயக்குனர்களுக்குன்றே தனி ரசிகர் கூட்டமே உண்டு. பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன், மணிரத்னம், ஷங்கர், லோகேஷ் கனகராஜ் என பெரிய பட்டியலே இருக்கிறது.

தமிழ் திரையுலகில் வாலி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. அதன்பின் விஜயை வைத்து குஷி படத்தை இயக்கினார். இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது. இயக்குனராக வெற்றி பெற்றாலும் அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே பேராசையாக இருந்தது.

எனவே, அவர் இயக்கிய படங்களில் அவரே ஹீரோவாக நடிக்க துவங்கினார். சில படங்களில் நடித்தார். அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். ஒரு கட்டத்தில் வில்லனாக நடிக்க துவங்கி அவருக்குள் இருக்கும் ஒரு சிறந்த நடிகரை காட்டினார்.

மாநாடு, மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. நடிப்பு அரக்கன் என்கிற பட்ட பெயரும் அவருக்கு கிடைத்திருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்தியன் 2 முதல் படங்களிலும் நடித்திருக்கிறார். தனுஷின் 50வது படமான ராயன் படத்திலும் நடித்திருக்கிறார்.

துவக்கத்தில் சினிமாவில் உதவி இயக்குனராக சேர்வதற்கு பலரிடமும் வாய்ப்பு கேட்டார். அதில் முக்கியமானவர் பாரதிராஜா. இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய எஸ்.ஜே.சூர்யா ‘அவரின் காலில் விழுந்து ‘சார் என்னை உங்க அசிஸ்டெண்ட்டா சேர்த்துக்குங்க சார் என கெஞ்சுவேன். ‘என்கிட்ட 10 பேர் இருக்காங்க. அதுல ஒருத்தன கொன்னுட்டு வா.. வாய்ப்பு தரேன்’ என சொல்லுவார்.

சில சமயம் அதில் யாரையாவது கொன்று விடலாமா என்று கூட தோன்றும். பாரதிராஜாவிடம் சேர வேண்டும் என்பதற்காக பாக்கியராஜின் உதவியாளர்கள் ஜி.எம்.குமார், லிவிங்ஸ்டன் ஆகியோரிடம் வேலை செய்தேன். கிழக்கு சீமையிலே படம் ஷுட்டிங் நடக்கும்போது தூரமாக நின்று அவர் எப்படி காட்சிகளை படம்பிடிக்கிறார் என கவனித்து சினிமாவை கற்றுக்கொண்டேன்’ என சொல்லி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.