சூர்யா ஆர்ஜே பாலாஜி இணையும் திரைப்படம் பற்றி பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இவர்கள் இருவரும் இணையும் அந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் தான் வெளியானது .அந்த போஸ்டரில் அருவா கத்தி குதிரை என ஒரு மர்மமாகவே அந்த போஸ்டரில் இருப்பதாக தெரிந்தது.
சூர்யாவின் 45 ஆவது திரைப்படமாக இருக்கும் இந்தப் படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்க படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். முதலில் இந்த படத்தின் கதை விஜய்க்கு தான் சொல்லப்பட்டது. ஆனால் விஜய் மறுக்கவே சூர்யா இந்த படத்தில் இணைந்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அந்த திரைப்படத்தின் கதையும் முதலில் விஜய்க்கு தான் சொல்லப்பட்டதாம். ஆனால் இந்த கதைக்கு நான் செட்டாக மாட்டேன் என விஜய் கூறியதனால் தான் சூர்யாவிடம் இந்த கதை சென்றடைந்து இருக்கிறது.
இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அந்த படத்தின் படப்பிடிப்பு ஓரளவு முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு தான் ஆர் ஜே பாலாஜியுடன் சூர்யா இணைவார். அந்த படத்திற்கு தற்போது வரைக்கும் ஹிண்ட் என பெயர் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் கதை ஒருவேளை சாமி படமாக கூட இருக்கலாம் என்றும் தெரிகிறது. ஏனெனில் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை முதலில் ஆர் ஜே பாலாஜி இயக்க இருந்து அதன் பிறகு சில பல பிரச்சனைகளால் அந்த படம் அவரால் கைவிடப்பட்டது.
அதே மாதிரியான ஒரு சாமி கதையை ஆர்.ஜே பாலாஜி மாசாணி அம்மன் என்ற பெயரில் எடுப்பதாக இருந்தார் .ஆனால் அந்தப் படத்தில் நயன்தாரா மாதிரி ஒரு முன்னணி நடிகை நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்திருந்தார் .மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நயன்தாரா நடிப்பதனால் இவர் எடுக்கப் போகும் மாசாணி அம்மன் திரைப்படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஒரு ஆலோசனையிலேயே ஆர் ஜே பாலாஜி இருந்தார்.
ஆனால் அதற்கான ஹீரோயின் யாரும் செட் ஆகாதால் பெண் சாமி என்பதை மேல் வெர்சனாக மாற்றி அதில் தானே ஹீரோவாக நடிக்கலாம் என எண்ணி இருந்தாராம். ஆனால் அது கடைசியில் சூர்யா நடிப்பதாக மாறிவிட்டதாம். அதுதான் இந்த சூர்யா 45 என கோடம்பாக்கத்தில் இந்த படத்தை பற்றிய ஒரு முழு கதையே வைரலாகி வருகின்றது
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…