Categories: Cinema News

விஜயெல்லாம் ஆளா? சூர்யாவின் அதிரடி ஆட்டம் ஸ்டார்ட்.. அதிர்ச்சியில் கோலிவுட்..

Surya: சூர்யாவின் கங்குவா திரைப்படம் ரிலீஸ் நெருங்கி இருக்கும் நிலையில் தற்போது அதன் சாதனையால் ரசிகர்கள் வாய் பிளந்துள்ளனர். இதை கேட்ட ரசிகர்களும் அட எப்படினாலும் சூர்யா மாஸ் என பேசி வருகின்றனர்.

சூர்யாவின் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இப்படத்தில் பாபி தியோல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சிறுத்தை சிவா இப்படத்தினை இயக்கி இருக்கிறார். படத்தின் ரிலீஸ் நவம்பர் 14க்கு தயாராகி இருக்கிறது.

இப்படத்தில் பாலிவுட் பிரபலங்கள் அதிகம் எனக் கூறப்படுகிறது. முதலில் இப்படத்தின் ரிலீஸ் அக்டோபர்10 என முடிவெடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் அந்த தேதியில் ரிலீஸாக இருந்ததால் திரைப்படம் தள்ளிப்போனது.

இந்நிலையில், சூர்யாவின் நடிப்பில் இரண்டு வருடம் கழித்து இப்படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். அதே வேளையில் இப்படத்திற்கு வட இந்தியாவிலும் பெரிய ஆதரவு நிலவி வருகிறது.

அந்தவகையில், 3500 திரையரங்குகளில் வட இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறதாம். முதல் நாளில் மிகப்பெரிய அளவில் ஓபனிங் வசூல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதை திட்டமிட்டு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் படத்திற்கு இது முதல்முறை எனக் கூறப்பட்டுள்ளது.

விஜயின் கோட் திரைப்படம் இந்த முறை வட இந்தியாவில் அடி வாங்கியது. ஆனால் சூர்யாவிற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது/

ராம் சுதன்
Published by
ராம் சுதன்