Connect with us

Cinema News

வாயை வச்சிக்கிட்டு சும்மா இருந்தா தானே… பப்ளிசிட்டிக்காக இப்படியா பேசுவாரு தாடி பாலாஜி..?

தாடிபாலாஜி கட்சியில சேர்ந்தது அவரோட விருப்பம்… அதுக்காக இப்படியா பேசுறது?

பிரபல நடிகர் தாடிபாலாஜி சமீபகாலமாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அவர் திடீரென விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளார். அது மட்டுமல்லாமல் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் காலில் விழுந்ததும் சர்ச்சையானது. இப்போது ரஜினி குறித்தும் தேவையில்லாமல் விமர்சனம் செய்தது சர்ச்சையாக வெடித்துள்ளது. இதுபற்றிப் பார்க்கலாமா…

தாடி பாலாஜி ரஜினி குறித்து சமீபத்தில் தேவையில்லாமல் விமர்சித்துள்ளாராம். ரஜினி என்ன தொட்டாப் பேசுறாரு? கேட்டுக்கு வெளியே இருந்து தானே கைகாட்டுறாரு… அதை நீங்க எப்படிப் பார்க்குறீங்கன்னு பிரபல யூடியூபர் கோடங்கியிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் இதுதான்.

தாடி பாலாஜி ஒரு பப்ளிசிட்டி தேடுறாரு. யாரும் அவரை சீண்டறது கிடையாது. படவாய்ப்பு இல்லை. வேலை வெட்டி இல்லை. இப்ப தமிழக வெற்றிக்கழகம் கட்சியில சேர்ந்துருக்காரு. மாநாட்டுல போய் வேலை பார்க்கணும்னு சேர்ந்துருக்காரு. அது அவரோட விருப்பம். யாருக்கும் யாரை வேணாலும் பிடிக்கலாம்.

இவருக்கு பிடிக்காமக் கூடப் போயிருக்கலாம். ஆனா அதைப் பொதுவெளியில பேசும்போது தாடி பாலாஜியோட சினிமா அனுபவமே என்னன்னு தெரியல. ஏன்னா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வந்து ஒரு 50 வருஷமா இந்த பீல்டுக்குள்ள இருக்காரு. எவ்வளவோ சாதனைகளைப் பண்ணிருக்காரு. எவ்வளவோ விஷயங்களை வந்து தமிழ்சினிமாவுல மட்டுமல்ல. இந்திய சினிமாவிலும் புரட்டிப் போட்டுருக்காரு.

ஒருத்தரைப் பற்றிப் பேசுறதுக்கு முன்னாடி அவரோட அனுபவத்தையும், சாதனையையும் தெரிஞ்சிக்கிட்டுப் பேசுனா நல்லாருக்கும். அதை விட்டுட்டு ஒருத்தரைப் பாராட்டணும்கறதுக்காக இன்னொருத்தரைக் காலி பண்ணிப் பேசறது சமீபத்துல அதிகமாயிருக்கு.

அந்த மாதிரி பேசுனதனால தான் நீங்க இப்ப தாடி பாலாஜியைப் பத்திக் கேட்குறீங்க. இல்லன்னா அவரை யாராவது சீண்டுவாங்களா? அவரை யாருக்காவது தெரியுமா? இன்டஸ்ட்ரில அவருக்கு என்ன பெரிய மரியாதை இருக்கு…? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தாடி பாலாஜி டிவியில் ஆங்கராக இருந்து சினிமாவுக்கு வந்தவர். இவர் காமெடியனாக சினிமாவில் நுழைந்தார். ராயன், மெய்யழகன், பிளடி பெக்கர், குட்பேட் அக்லி, வேட்டையன், அமரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்போது தளபதி 69 படத்திலும் நடித்து வருகிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top