Connect with us

Cinema News

வேட்டையன் வசூலுக்கு வேட்டு வைக்க வரும் அந்த விஷயம்!.. திங்கட்கிழமையே தள்ளாடுது!.. இதுல இதுவேறையா!..

ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்துக்கு அடுத்து 5 நாட்கள் பெய்யப் போகும் கன மழை மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்கின்றனர். 2வது வாரத்திலேயே இப்படியொரு சிக்கலை படம் எதிர்கொள்ளப்போகிறது.

ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்த வேட்டையன் திரைப்படம் 4 நாட்களில் 240 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

நடிகர் விஜய் தொடர்ந்து கோட் வசூல் வேட்டையை அறிவித்தும் கேக் வெட்டி கொண்டாடியும் வரும் நிலையில் ரஜினிகாந்த் படத்திலிருந்து தரப்பட்ட அழுத்தம் காரணமாக லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பை முதல் நாள் வெளியிடாமல் நான்காவது நாளில் வெளியிட்டுள்ளது என சோஷியல் மீடியாவில் கிண்டல்கள் கிளம்பியுள்ளன.

ரஜினிகாந்த் 73 வயதில் இப்படி ஃபைட் செய்து, டான்ஸ் ஆடி நடிப்பதை பார்க்கவே தாராளமாக காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். முதல் நான்கு நாட்கள் மிகப்பெரிய வசூல் வேட்டையை வேட்டையன் வசூல் செய்துள்ளது.

ஆனால், திங்கட்கிழமை அன்று ஏகப்பட்ட தியேட்டர்கள் மழையின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. நாளை முதல் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என வானிலை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், வேட்டையன் படத்தின் வசூல் படுத்துவிடும் என்கின்றனர்.

இரண்டாவது வாரத்தில் படத்தின் வசூல் குறைந்துவிட்டால் அதன் பின்னர் அதிகரிப்பது கடினம் என்றும் நான்கு வாரங்களில் ஓடிடியில் வேட்டையன் அமேசான் பிரைமில் வெளியாகி விடும் என்பதால் வேட்டையன் வசூல், 300 கோடியை தடுமா என்கிற சந்தேகத்தை பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் வைத்துள்ளனர்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top