Connect with us

Cinema News

ஆயுத பூஜை அதிர்ஷ்டம் அடித்ததா?.. வேட்டையன் 2வது நாள் வசூல் பிக்கப்பா?.. டிராப்பா?

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள வேட்டையன் படத்தின் 2வது நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆயுத பூஜை, விஜயதசமி, ஞாயிற்றுக்கிழமை என விடுமுறைகள் உள்ள நிலையில், வசூல் அதிகரித்து வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி வெளியான வேட்டையன் திரைப்படம் உலக அளவில் வசூல் வேட்டை ஆடி வருகிறது. ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் கமர்சியல் படமாக வெளியான நிலையில் அந்தப் படத்திற்கு சன் பிக்சர்ஸ் பெரிய அளவில் புரமோஷன் செய்திருந்தது.

ஆனால் லைக்கா நிறுவனம் இந்த முறை பெரிய அளவுக்கு வேட்டையன் படத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்லாத நிலையில், படத்தின் டீசர் மற்றும் டிரைலர் அதிக அளவில் ரசிகர்களை கவரவில்லை. அதன் காரணமாக படத்தின் முதல் நாள் வசூல் 100 கோடி ரூபாயை தொடவில்லை.

வெறும் 70 கோடி ரூபாய் உலக அளவில் வேட்டையன் திரைப்படம் முதல் நாளில் வசூல் செய்திருந்தது. இந்நிலையில் ஆயுதபூஜை விடுமுறை தினமான நேற்றும் ரஜினிகாந்தின் வேட்டையின் திரைப்படத்தை பார்க்க தியேட்டர்களுக்கு குவிந்தனர்.

விஜய் மற்றும் ரஜினிகாந்த் மட்டுமே தமிழ் சினிமாவில் தற்போது அதிக அளவிலான ரசிகர்களை தியேட்டருக்கு கொண்டு வருகின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 73 வயதிலும் முதல் நாளில் 70 கோடிக்கு மேல் வசூல் செய்யும் பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷாவாக வாழ்ந்து வருகிறார்.

வேட்டையன் திரைப்படம் நேற்று இந்தியா முழுவதும் சுமார் 28 கோடி வசூல் செய்திருந்தது. உலக அளவில் ஒட்டுமொத்தமாக வேட்டையின் திரைப்படத்தில் இரண்டாவது நாள் வசூல் 50 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இரண்டு நாட்களில் 120 கோடி வசூலை வேட்டையன் திரைப்படம் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். விஜயதசமி ஆன இன்றும் ஞாயிற்றுக்கிழமை என நாளையும் சுமார் 40 கோடி அளவுக்கு வசூல் வந்தால் வேட்டையன் திரைப்படம் போட்ட காசை எடுத்து விடும் என்று கூறுகின்றனர்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top