Connect with us

Cinema News

Vijy TVK:அதே டெய்லர்… அதே வாடகை..! இணையத்தில் வைரலாகி வரும் விஜய் போட்டோ..!

தமிழ்சினிமா உலகில் சுப்ரீம் ஸ்டார் என்று போற்றப்பட்டவர் சரத்குமார். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்து இருப்பார். சூரியன் படம் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் நாட்டாமை, சூர்யவம்சம் படங்கள் அதிரிபுதிரி ஹிட் அடித்தன. அரசியல் ஆசை யாரைத்தான் விட்டது? இவரும் கட்சி ஆரம்பித்தார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்று பெயரிட்டார். எம்.பி.ஆனார். 2011ல் தென்காசி தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது பிஜேபியில் இணைந்து விட்டார். ஆரம்பத்தில் 1996ல் திமுகவில் இணைந்தார். 1998ல் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

2001ல் எம்.பி.ஆனார். 2006ல் கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறியவர் 2007ல் கட்சியைத் தொடங்கினார். அப்போது மஞ்;சளும், சிகப்பும் கலந்த கொடி தான் அவரது கட்சிக்கொடியாக இருந்தது. அந்த சிகப்பில் ஒரு ஸ்டார் இருக்கும். மஞ்சளும், சிகப்பும் கலந்த நிறமுள்ள துண்டை தோளில் அணிந்து இருப்பார்.

விஜயும் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கி விட்டார். விஜயின் கட்சிக் கொடியும் அதே கலர் தான். நடுவில் மஞ்சளும், இரு புறமும் சிகப்பு கலரும் இருக்கும். மஞ்சள் கலரில் இரட்டை யானையும், வாகைப்பூவும் இருக்கும். விஜயின் துண்டிலும் சிகப்பு மற்றும் மஞ்சள் நிறம் தான் இருந்தது. கட்சி மாநாட்டில் அவர் ரேம்ப் வாக் பண்ணும்போது தொண்டர்கள் வீசிய துண்டை லாவகமாகக் கேட்ச் செய்து தோளில் அணிந்தபடி நடந்து வந்தார். அது பலராலும் விமர்சனத்திற்குள்ளானது.

விஜய் மாநாட்டில் பேசிய பேச்சை லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து கண்டு ரசித்தனர். பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்களும் அதை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் விஜயை ரொம்பவே தாக்கிப் பேசியுள்ளார். அவரது கொள்கை கருவாட்டு சாம்பார் என்றும் திராவிடம், தமிழ்தேசியத்துக்கு விளக்கம் சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது விஜய் அதே நிறமுள்ள துண்டை அணிந்து இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. இதைப் பார்க்கும் நெட்டிசன்கள் ‘அதே டெய்லர், அதே வாடகை’ என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top