Connect with us

Cinema News

விஜய் எம்ஜிஆர் மாதிரி, திரிஷா ஜெயலலிதா மாதிரி… உண்மையில் அப்படியா இருக்கு? வறுத்தெடுத்த பிரபலம்

விஜய் தவெக கட்சியை ஆரம்பித்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். வரும் சட்டமன்றத் தேர்தல்தான் இவரது குறி. இவரது கடைசி படம் ஜனநாயகன். வரும் பொங்கலையொட்டி வெளியாகிறது. விஜயின் அரசியல் குறித்து பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி என்ன சொல்கிறார்னு பாருங்க.

எம்ஜிஆர், ஜெயலலிதா வாழ்ந்த கட்டம் வேற. எம்ஜிஆர் 1961ல அரசியலுக்கு வர்றாரு. 1977ல் முதல் அமைச்சர் ஆகிறாரு. அது தொலைக்காட்சி வராத காலகட்டம். இணையம்னா என்னன்னு தெரியாத காலகட்டம். சினிமாவைத் தவிர வேற எதுவும் தெரியாத காலகட்டம். சினிமா நடிகர்களை மக்கள் கடவுளாக வணங்குன காலகட்டம். ஆனா இப்போ என்னன்னா இன்னைக்கு எம்ஜிஆர் மாதிரி படங்களை எடுக்க ஆள் கிடையாது. இன்னொன்னு என்னன்னா எம்ஜிஆர் தன்னைத் திட்டமிட்ட சினிமாவில் செதுக்கிக்கொண்டே வந்தார்.

திராவிட சிந்தனையால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்தார். பின்னால நிறைய கத்துக்கிட்டு அதில இருந்து பிரிஞ்சி அதிமுகவைத் தொடங்கினார். முதல் அமைச்சர் ஆனார். எம்ஜிஆருக்கு இருந்த அந்த மாதிரியான புகழ் விஜய்க்கு இருக்கா? அப்படின்னா விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். அதுல மாற்றுக்கருத்து கிடையாது.

அன்னைக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்த காலகட்டத்துக்கும், இன்னைக்கு விஜய், திரிஷா இருக்குற காலகட்டத்துக்கும் வாழ்க்கை முறைகள் வேற. எம்ஜிஆர் மனைவியைத் தனியா அனுப்பி வச்சிட்டு அந்த வேலையைப் பார்க்கல. அவரு குடும்பத்தோடு இருந்தாரு. ஜெயலலிதா மேல அரசல்புரசலா அந்தப் பேச்சு பேசப்பட்டது. அது உண்மைன்னு யாருமே நிரூபிக்க முடியலை.

ஆனா பின்னாடி அதே கட்சியை ஜெயலலிதா கைப்பற்றி முதல் அமைச்சரா ஆனாங்க. ஆனா இன்னைக்கு இணையத்துல எல்லா விஷயத்தையும் போட்டு நாறு நாறா கிழிச்சி நடுத்தெருவுக்குக் கொண்டு விட்டுருவாங்க. இல்லாத விஷயத்தையே இருக்குறமாதிரி பேசுவாங்க. அப்படின்னா இருக்குற விஷயத்தை இன்னும் கூடுதலா பேசுவாங்க. இதுதான் இன்னைக்கு இருக்குற இணைய காலகட்டத்துல உள்ள சிக்கல்.

சுத்தமானவன்னு நிரூபிக்கிறதுக்குள்ள 5 வருஷம் போயிடும். விஜய் இந்தக் காலகட்டத்துல தான் அரசியலுக்கு வந்துருக்கு. இதுவரைக்கும் பெரிசா எந்த ஒரு அரசியல் கட்சியையும் எதிர்த்துப் பேசல.

எந்த ஊடகத்துக்கும் பேட்டி கொடுக்கல. விஜய் பெரும்பாலும் அரசியலைப் பத்தி படிச்சதே இல்லை. அதனால அரசியலுக்குள்ள வந்து ஜெயிக்கறது சிரமமான காரியம்தான். விஜய்க்கு அரசியல்ல நடிக்கத் தெரியல. திரிஷா கூட பல பேச்சுகள் பேசுறாங்க. அது அவரோட தனிப்பட்ட குணம்.

அதுகுறித்து நமக்குத் தேவையில்லை. நம்மைப் போய் பார்க்கவும் இல்லை. விஜய் தன் பிறந்தநாள் அன்று எந்தத் தொண்டர்களையும் சந்திக்கல. திரிஷாவோட தன் பிறந்தநாளைக் கொண்டாடப் போயிட்டாரு. அது எந்தளவு உண்மைன்னு தெரியல. தலைவன்னா தன்னோட பிறந்தநாளை வெகுவாகக் கொண்டாடணும். அல்லது கொண்டாடுற மாதிரி நடிக்கணும். ரஜினியால அதனாலதான் அரசியலுக்கு வர முடியல. பெரும்பாலும் தன்னோட பிறந்தநாளுக்கு இமயமலைக்குப் போயிடுவாரு.

அப்படின்னா ரஜினிக்குத் தெரிந்த அரசியல்கூட விஜய்க்குத் தெரியலையோன்னு எண்ணத் தோணுது. யாரோ இவரை அரசியல்ல தள்ளி விட்டுருக்காங்க. விஜய்க்கு போதைப்பொருள் புழக்கத்துல பங்கு இருக்குன்னும் சொல்றாங்க. 6 மணிக்கு மேல சினிமாவுல நடிக்க மாட்டேங்குறாங்க. ஒரு நடிகரைப் போய் இப்படி விமர்சிக்கத் தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top