Connect with us

Cinema News

விஜய் கட்சியின் கொள்கைன்னா என்னன்னு கேட்டீங்கள்ல…. கொஞ்சம் இங்கே பாரு கண்ணா..!

கொள்கைகளைக் கேட்டால் நல்லாத் தான் இருக்கு… ஆனா செயலுக்கு வரணுமே…!

இன்று விக்கிரவாண்டியில் விஜயின் தமிழக வெற்றிக்கழக மாநாடு சீரும் சிறப்புமாக நடந்து வருகிறது. கட்சியின் கொள்கைகள் பற்றிப் பார்க்கலாமா…

விஜய் மாநாட்டில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ சமமான உறுதிமொழியைக் கடைபிடிப்பேன் என்று உறுதிமொழியை பொருளாளர் பேராசிரியர் வெங்கட்ராமன் கூறினார். வரவேற்புரையை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆற்றினார்.

தொடர்ந்து கழகத்தின் கொள்கைப் பாடல் ஒலிபரப்பானது. மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை தான் தவெகவின் கொள்கை என்று அந்தப் பாடலில் விஜயின் குரலுடன் இடம்பெற்றது. ‘வெற்றி வெற்றி வெற்றி வாகை வெற்றி வெற்றி வெற்றி’ என தொடங்கும் தமிழக வெற்றிக்கழத்தின் கொள்கைப் பாடல் மாநாட்டில் வெளியிடப்பட்டு அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.

இதில் திருவள்ளுவர் அம்பேத்கர், பெரியார் வழியில் தவெக பயணம் என்றும் வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் வழியில் தவெக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மதுரையில் தலைமைச் செயலகக் கிளைக்கழகம் செயல்படும்.

அரசியல் தலையீடு இல்லாத நிர்வாகம் அமைக்கப்படும். ஆளுநர் பதவியை அகற்றவும், பதனீரை தமிழக பானமாகக் கொண்டு வரப்படும். போதைப்பொருளை ஒழிக்க சிறப்புக் கூட்டம். விவசாயிகளுக்கும், நுகர்வோர்களும் பயனுற நடவடிக்கை, பெண்களுக்கு 3ல் ஒரு பங்கு முன்னுரிமை. எல்லாருக்கும் எல்லாமும் ஆன சமுதாயம் கொண்டு வரத் திட்டம், சாதிவாரிக் கணக்கெடுப்பு விகிதாச்சார இட ஒதுக்கீடு என பல சிறப்பம்சங்கள் தான் தவெக வின் திட்டம் என தெரிய வருகிறது.

கொள்கைப்பாடலில் விஜய் ‘மதச்சார்பற்ற சமூக நிதி கொள்கையை நிலைநாட்ட நான் வரேன்’ என்றார். விஜய் கொடுக்க கழகத்தின் கொள்கைகளை பேராசிரியர் சம்பத்குமார் வாசித்தார். எங்களது கோட்பாடு பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.

பாரபட்சமற்ற சமூகம் படைத்தல். மதம், சாதி, இனம், மொழி பாலின அடையாளங்களுக்குள் சுருக்காமல் அனைத்து மக்களுக்கும் எல்லாமும் கிடைக்கச் செய்வது குறிக்கோள். மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள். சமதர்ம சமூக நீதி இட ஒதுக்கீடு அல்ல. உண்மையான விகிதாச்சார பங்கீடு தான் நீதியைத் தரும்.

எல்லா நிலைகளிலும், ஆண்களுக்கு நிகரானவர் பெண்கள் என்ற சமத்துவம். அனைத்து மதத்தவரையும், மதநம்பிக்கை அற்றவரையும் சமமாகப் பார்த்தல். இருமொழிக் கொள்கை. தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றுகிறது.

தமிழ் மொழிக்கல்விக்கு முன்னுரிமை. ஊழலற்ற நிர்வாகம், கல்வி, சுகாதாரம், தூய குடிநீர் என்பது எல்லாருக்குமான அடிப்படை உரிமை. சுற்றுச்சூழல், இயற்கை வளங்களைப் பாதுகாப்பது அரசின் தலையாய கடமை. தீண்டாமை ஒழிப்பு, போதை இல்லா தமிழகம் உள்பட பல முக்கிய அம்சங்களைக் கொள்கையாகக் கொண்டு கட்சி செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top