Vijay sethupathi: தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்தான் விஜய் சேதுபதி. அலட்டிக்கொள்ளாமல், பந்தா பண்ணாமல் நடிப்பார். பெரும்பாலான நடிகர்கள் இயக்குனர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதை மட்டும் கொடுத்துவிட்டு போய்விடுவார்கள். ஆனால், ஒரு கதாபத்திரத்தை உள் வாங்கி தனக்கு என்ன தோன்றுகிறதோ அப்படி நடிப்பவர்தான் விஜய் சேதுபதி.
அதோடு நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அவர் எப்போதும் சொல்வது இல்லை. மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் வில்லனாக கலக்கி இருக்கிறார். அதனால்தான் அவரை எல்லோருக்கும் பிடித்துபோனது. மாஸ்டர் படம் பார்க்கும்போது நமக்கு விஜய் சேதுபதி மீது கோபம் வரும். அதுதான் அவரின் நடிப்பு.
பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த கானோம், சூது கவ்வும், ஆண்டவன் கட்டளை, சூப்பர் டீலக்ஸ், தர்மதுரை, மாமனிதன், மகாராஜா என ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவங்களை கொடுத்தவர் இவர். இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களை வேறு எந்த நடிகரும் ஏற்று நடிக்க மாட்டர்கள். ஏனெனில், ஹீரோ என்கிற இமேஜை உடைத்து நடிப்பார் விஜய் சேதுபதி.
தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என கலக்கி வருகிறார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வெளியான ஜவான் படத்திலும் வில்லனாக அசத்தி இருந்தார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலக்கி வருகிறார். விஜய் சேதுபதிக்கு எந்த சினிமா பின்னணியும் கிடையாது.
திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து அதன்பின்னரே ஹீரோவாக மாறினார். அழகான கதாநாயகி, 4 பாடல்கள். வில்லனை துவம்சம் செய்யும் ஹீரோ, 4 சண்டை காட்சிகள் என கமர்ஷியல் மசாலா ஃபார்முல்லாவுக்குள் சிக்காமல் தனக்கு பிடித்த கதைகள், கதாபாத்திரங்கள் என பயணிப்பவர்தான் விஜய் சேதுபதி.
அதேநேரம், தியேட்டரில் சென்று தனது படங்களை பார்க்கும் பழக்கம் விஜய் சேதுபதிக்கு இல்லையாம். இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘முன்பெல்லாம் தியேட்டருக்கு போய் நான் நடிக்கும் படங்களை பார்ப்பேன். இப்போது பார்ப்பதில்லை. சில படங்கள் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும்போது போய் அமைதியாக நின்று கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு வந்துவிடுவேன். ரசிகர்களுக்கு படம் பிடித்திருந்தால் சந்தோஷம்தான். ஆனால், பிடிக்கவில்லை எனில் கஷ்டமாகிவிடும். அதனால் தியேட்டரில் படம் பார்ப்பதை தவிர்த்து விடுகிறேன்’ என சொல்லி இருக்கிறார்.
SAC: சினிமாவிலும்…
Devara 2:…
Kaithi 2:…
வடிவேலு ஒரு…
TVK Vijay:…