Connect with us

Cinema News

எனக்கு பாம்பும் ஒன்னுதான்.. அரசியலும் ஒன்னுதான்.. விளையாடுவேன்!. விஜய் மாஸ் ஸ்பீச்!…

முதல் மாநில மாநாட்டில் விஜயின் பேச்சு அதிரடியை கிளப்பி வருகிறது

Vijay: நடிகர் விஜய் தன்னுடைய முதல் மாநில மாநாட்டில் ரொம்ப வெளிப்படையாகவே தன் மீது இருந்த எல்லா கேள்விகளுக்குமே நெத்தி பொட்டில் அடித்தது போல பேசிவருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் தொடங்கி நடந்து வருகிறது. பொறுமையாக பேசும் நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் மாநாட்டில் தொடக்கமே அதிர விட்டு இருக்கிறார்.

விஜய் பேசும்போது, பெரியார் எங்கள் கொள்கை தலைவர். ஆனால் அவர் தெரிவித்த கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நான் எடுக்க போவதில்லை. அதில் தங்களுக்கு உடன்பாடும் இல்லை.

எங்கள் மீது யாரும் எந்த சாயமும் பூச போவதில்லை. நாங்கள் முடிவெடுத்த கலரை தவிர எங்கள் மீது யாரும் எந்த கலரையும் பூச முடியாது. எங்களுடைய கழகத்தில் பெண்கள் தான் அதிக ஈடுபாட்டுடன் இருக்க போகிறார்கள். உங்களில் ஒருவனாக நான் எப்போதும் உங்களுடனே இருப்பேன்.

என்னால அரசியலில் தாங்க முடியுமா என பலரும் கேட்டனர். அவர்களுக்கு என் ஸ்டைலில் குட்டி கதை சொல்லவா. இது நம்மோட கொள்கையும் சொல்லும். ஒரு நாட்டில் ஒரு போர் வந்துச்சாம். அப்போ அங்க அதிகாரம் ஒரு சின்ன பையனிடம் இருந்துச்சாம்.

அந்த பையன் தன்னுடைய படைகளுடன் போருக்கு சென்றான். பெரிய தலைவர்கள் உன்னால முடியுமா, செய்வீயா எனக் கேள்வி எழுப்பினர். அந்த பாண்டிய வம்சத்தோட சின்ன பையன் என்ன செஞ்சானு கேட்டு தெரிஞ்சிக்கோங்க.

Continue Reading

More in Cinema News

To Top