விஜய்சேதுபதி கடைசியாக நடித்த மகாராஜா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படி ஒரு வித்தியாசமான கதைகளத்தில் விஜய் சேதுபதி தான் செட்டாவார் என்றெல்லாம் பேசப்பட்டது. அந்தப் படத்தை இயக்கியவர் நித்திலன் சாமிநாதன்.
இப்போது பிக்பாஸ் சீசன் 8ல் இறங்கி பட்டையைக் கிளப்பி வருகிறார். கமல் போல வருமா என்றெல்லாம் சந்தேகமாய் கேட்டவர்களின் வாயை அடைத்துள்ளார். நிகழ்ச்சியை வெகு சிறப்பாகவே நடத்தி வருவதாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஒருவருக்கு கண்டிப்பாக சொல்ல வேண்டிய விஷயத்தை எந்த வித சங்கோஜமும் படாமல் பட்டென்று சொல்லி விடுகிறார். சுற்றி வளைத்துப் பேசாமல் அவர் பேசுவது ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது.
விஜய்சேதுபதி, காயத்ரி ஜோடி பார்க்குறதுக்கே அழகா இருக்கும். எத்தனை படங்களில் நடிச்சிருக்காங்க. இந்த ஜோடி எதேச்சையா அமைந்ததா? விஜய்சேதுபதி அந்த நடிகைக்கு சிபாரிசு பண்ணினாரான்னு எல்லாம் நேயர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்விகளை அடுக்கி இருந்தார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
விஜய் சேதுபதி உடன் ஆரம்பகாலகட்டத்தில் நடிகை காயத்ரி பல படங்களில் இணைந்து நடித்து வந்தார். அவை எல்லாமே சூப்பர்ஹிட். அது தற்செயலாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். காயத்ரியைப் பொருத்த வரை அவர் ஒரு சிறந்த நடிகை.
அப்படிப்பட்ட நடிகையை தன்னோட படத்திற்காக விஜய்சேதுபதி சிபாரிசு செய்திருந்தாலும்கூட அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. நீங்க ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறீங்க. அந்தப் படத்துக்கு கதாநாயகியைத் தேடும்போது உங்களுக்குத் தெரிஞ்ச நல்ல ஒரு நடிகை இருந்தா அவங்களை சிபாரிசு பண்ண மாட்டீங்களா? என்றும் அந்த நேயருக்குப் பதில் அளித்துள்ளார்.
2014ல் விஜய்சேதுபதியும் காயத்ரியும் இணைந்து நடித்த ரம்மி படம் மாஸ். இந்தப் படத்தில் கூடை மேல கூடை வச்சி பாடல் சூப்பர்ஹிட். 2017ல் புரியாத புதிர் படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களிலும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…