Connect with us

Cinema News

ஜெயலலிதா அஜீத்திடம் சொன்ன அந்த தகவல்… விஜய்க்கு எதிரா ‘தல’ களம் இறங்குவாரா?

அஜீத், விஜய் படங்கள்னாலே சினிமால தான் போட்டி… அரசியலிலும் வருமா?

சினிமாவில் தான் விஜய், அஜீத் படங்களுக்குள் போட்டி இருக்கும். இருவரும் உண்மையிலேயே நல்ல நண்பர்கள். அஜீத் விஜயின் மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவிப்பார் என்று பார்த்தால் அது நடக்கவில்லை. அது ஒரு புறம் இருக்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஜீத்துக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார். இது அவரை அரசியலுக்குள் இழுப்பதற்கா என்றும் பல தகவல்களை பிரபல மூத்த பத்திரகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

அஜீத்துக்கு சினிமாவில் நடிக்கக்கூட பெரிய அளவில் விருப்பமில்லை. முதல்ல பைக் ரேஸ், இப்போ கார் ரேஸ்சுக்குப் போயிட்டார். திருவான்மியூர்ல இருக்குற மெக்கானிக் சேசு அஜீத்தோட ப்ரண்டு. அவர் பைக்கை அக்குவேறு ஆணிவேராக கழற்றி மாட்டுவாராம். அதைக் கண்ணால பார்க்குற அஜீத் அதே மாதிரி மாட்டுவாராம்.

முதுகுல 32 ஆபரேஷன். அப்படி இருந்தும் அவர் விடாம நடிக்க ஆரம்பிச்சாரு. கிடைக்கிற நேரத்துல சின்னதா ஒரு பெட் போட்டு சூட்டிங் இல்லாத போது படுத்துடுவாராம். அப்போ புரொடியூசர், அசோசியேட்ஸ்கிட்ட ‘என்னய்யா இவரு அடிக்கடி போய் படுத்துக்றாரு… சொல்ல மாட்டீங்களா’ன்னு சொல்லவும், அதை அஜீத்திடம் வந்து சொல்வாங்களாம்.

அதைக் கேட்ட உடனே பணம் போட்ட புரொடியூசர் பாதிக்கக்கூடாதுன்னு வலியையும் தாங்காம எழுந்து நடிப்பாராம் அஜீத். அப்படி அவரு கஷ்டப்பட்டு உழைச்சி முன்னேறினவரு. இன்னைக்கு அஜீத்தை திமுக வாழ்த்து சொல்லி அரசியலுக்கு உள்ளே இழுக்கப் போறாங்களா? இரும்புப்பெண்மணி ஜெயலலிதாவுக்கு அஜீத்தை ரொம்ப பிடிக்குமாம்.

அதிமுகவோட பொறுப்புகள் எல்லாம் ஏத்துக்கோங்கன்னு சொன்னதா ஒரு தகவல். இல்ல மேடம் எனக்கு வேணாம்னு அஜீத் சொன்னாராம். இது எந்தளவு உண்மைன்னு தெரியலை. நடந்துருக்கலாம். அஜீத்தே சொன்னால் தான் உண்டு. அவருக்கு விடாமுயற்சி, குட்பேட் அக்லியை எல்லாம் தாண்டி கார் ரேஸ்ல தான் ஆர்வம். அதனால அவர் எப்படி அரசியலுக்கு வருவார்?

இன்னைக்கு விஜய், பிஜேபி, திமுக தான் எதிரின்னு சொல்லிட்டாரு. இன்னைக்கு முதல்வர் அஜீத்துக்கு வாழ்த்து சொல்லிருக்காரு. சிவகார்த்திகேயனின் அமரன் படத்தைப் பார்த்து கமலை வாழ்த்திருக்காரு. இதெல்லாம் திமுகவின் அறிவிக்கப்படாத உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் ஆக மாற வாய்ப்பு உண்டு. அதற்கான வேலைகள் நடந்துக்கிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. முக்கியமாக விஜய்க்கு எதிராக அஜீத் அரசியலில் இறங்க வாய்ப்பே இல்லை.

விஜய் எந்த ஒரு களத்திலும் இல்லாமல் நேரடியாக அரசியல் களத்திற்குள் வந்தவர். சாமானிய மக்களைப் போய் விஜய் சந்திக்கணும். பத்திரிகையாளர்களை சந்திக்கணும். விஜய் இன்னைக்கு 234 தொகுதிகளிலும் நடைபயணத்துக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காரு.

போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். அரசியலில் சாமானிய மக்களை எப்போது சந்திக்கிறாரோ அன்று முதல் விஜயின் வெற்றிப்பயணம் தொடங்கி விட்டது என்பது தான் உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இப்போது நடந்து முடிந்த மாநாட்டில் அதிமுகவைப் பற்றி விஜய் விமரசனம் எதுவுமே பண்ணவில்லை. அதற்கு பின்னாடி கூட்டணிக்கு வாய்ப்பு இருக்குன்னும் பேசப்படுகிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top