Categories: Cinema News

ராசியில்லாத மியூசிக் டைரக்டரா இருந்த யுவன்… கைதூக்கி விட்ட தல..!

இசையில் 2கே கிட்ஸ்களையும் கவரக்கூடிய அளவில் மியூசிக் போட்டு பல பாடல்களை ஹிட்டாக்கியவர் யுவன் சங்கர ராஜா. இவரது இசை 90ஸ் கிட்ஸ்களைத் தான் என்றாலும் 2கே கிட்ஸ்களையும் இழுத்துவிட்டார் என்றால் ஆச்சரியம் தான். அவரது ஆரம்ப காலப் படங்களின் கசப்பான அனுபவங்களையும் சொல்கிறார். அதே நேரம் தனக்கு ரீ என்ட்ரி கொடுத்த தல அஜீத்குமாரைப் பற்றியும் சொல்கிறார். அதுல என்னென்ன சுவாரசியங்கள்னு பார்க்கலாமா…

தீனா வரைக்கும் அன்லக்கி மியூசிக் டைரக்டர்னு முத்திரை குத்திட்டாங்க. அந்த நேரத்துல நான் நல்லா தானே பண்றேன். எதனால வரல. படம் ஓடலன்னா நான் என்ன பண்ணுவேன். அப்போ கரெக்டா அஜீத் சார் வந்தாரு. அவராவே வீட்டுக்கு வந்தாரு. யுவன் இந்தப் படத்தை நீதான் பண்றேன்னாரு.

பூவெல்லாம் கேட்டுப்பார் படத்துக்கு அப்புறம் 4 வருஷமா எனக்குப் படமே இல்லை. அந்த நேரத்துல பூவெல்லாம் கேட்டுப்பார் சரியா போகலை. அதுக்கு அப்புறம் தீனா வந்தது. அதுக்கு அப்புறம் துள்ளுவதோ இளமை வந்தது. இரண்டும் அடுத்த கட்டத்துக்கு அழைச்சிட்டுப் போனது.

7ஜி ரெயின்போ காலனி படத்துல டைரக்டர் செல்வராகவன் என்னை ரொம்ப நம்பினாரு. அப்போ ஒரு சீன் நீண்ட நேரம் அமைதியா போகும். அப்போ அரவிந்த் கேமரா மேனா இருந்தாரு. என்ன இவ்ளோ சைலண்டா போகுதுன்னு கேட்பாரு. அதுக்கு செல்வராகவன் டேய் இதை யுவன் பார்த்துக்குவான் விட்ருன்னு சொல்லிடுவாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1997ல் வெளியான அரவிந்தன் படத்தில் தான் யுவன் அறிமுகம். அதன்பிறகு வேலை, கல்யாண கலாட்டா, பூவெல்லாம் கேட்டுப்பார் படங்கள் வந்தன. தொடர்ந்து உனக்காக எல்லாம் உனக்காக, ரிஷி படங்களும் மண்ணைக் கவ்வின. இடையில் பூவெல்லாம் கேட்டுப்பார் பாடல்கள் செம. ஆனால் படத்துக்குப் பெரிய வரவேற்பு இல்லை. 2000த்தில் வந்த தீனாவுக்குப் பிறகு தான் இவருக்கு மவுசு ஏற ஆரம்பித்தது.

மங்காத்தா, வலிமை, ஆரம்பம், நேர்கொண்ட பார்வை, தீனா, பில்லா 2 ஆகிய அஜீத் படங்களுக்கு யுவன் சங்கரராஜா தான் இசை அமைப்பாளர். யுவன் சங்கரராஜா தான் இசை அமைப்பாளர். பருத்தி வீரன் படத்துக்காக சிறந்த பிலிம் பேர் விருதைப் பெற்றுள்ளார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்