ரெடின் கிங்ஸ்லி வீட்ல விசேஷமுங்கோ.. மனைவி சங்கீதா வெளியிட்ட க்யூட் வீடியோ வைரல்!..
ரெடின் கிங்ஸ்லி: தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. சினிமாவில் முதன்முதலாக குரூப் டான்சராக தனது திரைப்படத்தை தொடங்கிய இவர் அதன் பிறகு நடனபள்ளி ஒன்றையும் தொடங்கினார். அப்போதுதான் நெல்சன் திலிப் குமாருக்கும், இவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நெருக்கமாக தன்னுடைய திரைப்படங்களில் ரெடின் கிங்ஸ்லியை நடிக்க வைத்தார்.
முதன்முதலாக நெல்சன் இயக்கி பாதியில் கைவிடப்பட்ட வேட்டை மன்னன் என்கின்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் ரெடின் கிங்ஸ்லியை அறிமுகம் செய்தார். அதனை தொடர்ந்து கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தை இயக்கினார் நெல்சன். அந்த திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசத்தியிருந்தார். முதல் படத்திலேயே பலரின் கவனத்தை ஈர்த்தார்.
இருந்தாலும் நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகர்களில் ஒருவராக மாறினார் ரெடின் கிங்ஸ்லி. டாக்டர் திரைப்படத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவரை தேடி வந்தது. அதன்படி இவர் கடைசியாக கங்குவா, பிளடி பெக்கர் திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது தனது கைவசம் பத்துக்கு மேற்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கும் இவர் காமெடி நடிகர்களின் வரிசையில் இணைந்து இருக்கின்றார்
ரெடின் கிங்ஸ்லி திருமணம்:
யாரும் எதிர்பாராத வகையில் 47 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சமீபத்தில் சீரியல் நடிகையான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சங்கீதாவுக்கு இது இரண்டாவது திருமணம். கடந்த ஆண்டு இருவரும் எளிமையான முறையில் பெங்களூருவில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியான சமயத்தில் பலரும் ஆச்சரியப்பட்டனர்.
திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக சுற்றி வந்த ரெடின் கிங்ஸ்லி திடீரென்று காதலில் விழுந்து திருமணம் செய்து கொண்டிருக்கின்றார். இவருக்கு இப்படி ஒரு காதலா? என்று இயக்குனர் நெல்சன் ஆச்சரியப்பட்டதாக பல பேட்டிகளில் கூறியிருந்தார்
மனைவி சங்கீதா கர்ப்பம்:
ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியாகி வந்தது. ஆனால் இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்படி இருக்க தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒரு வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கின்றார் நடிகை சங்கீதா.
அந்த வீடியோவில் தம்பதிகள் இருவரும் இணைந்து மகிழ்ச்சியான செய்தியை கூறியிருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. மேலும் இந்த செய்தியை அறிந்த ரெடின் கிங்ஸ்லி ரசிகர்கள் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.