நானும் கட்சி ஆரம்பிச்சிட்டேன்!. குல்லா போட மாட்டேன்!.. விஜயை கலாய்க்கும் கூல் சுரேஷ்!..

by Murugan |
நானும் கட்சி ஆரம்பிச்சிட்டேன்!. குல்லா போட மாட்டேன்!.. விஜயை கலாய்க்கும் கூல் சுரேஷ்!..
X

Cool Suresh: பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் கூல் சுரேஷ். கவுதம் மேனன் இயக்கிய காக்க காக்க படம் மூலம் இவர் சினிமாவில் பிரபலமானார். அதன்பின் சந்தானம் நடித்த பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார். இவரை கலாய்த்து ரசிகர்களை சிரிக்க வைத்து கொண்டிருந்தார் சந்தானம்

ஆனால், சந்தானம் ஹீரோவாக நடிக்க போன பின் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, ரசிகர்களிடம் பிரபலமாக புதிய படங்களை வித்தியாசமாக புரமோஷன் செய்ய துவங்கினார். இவர் முதலில் ஆரம்பித்தது கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படம்தான். ‘வெந்து தணிந்தது காடு.. சிம்புவுக்கு வணக்கத்த போடு’ என ஆரம்பித்தார்.


அதன்பின் ஒவ்வொரு படங்கள் வெளியாகும் போது ‘வெந்து தணிந்தது காடு. இதுக்கு வணக்கத்தை போடு’ என பல வகைகளிலும் புரமோஷன் செய்தார். அந்த படம் எதை பற்றியதோ அந்த கெட்டப்பில் போய் புரமோஷன் செய்து வந்தார். பைக் ரேஸ் என்கிற பெயரில் அலப்பறை செய்து வந்த டிடிஎப் வாசன் மஞ்சள் வீரன் என்கிற படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அவர் பல பிரச்சனைகளிலும் சிக்க அவருக்கு பதில் கூல் சுரேஷ் நடிப்பதாக படக்குழு அறிவித்தது.

இந்த படம் ஷூட்டிங் நடக்கிறதா? கூல் சுரேஷ் ஹீரோவாக நடித்து வருகிறாரா என்பதெல்லாம் தெரியவில்லை. இந்நிலையில்தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயை வம்பிழுத்திருக்கிறார் கூல் சுரேஷ். அதுவும் நேரிடையாக விஜயை கலாய்த்திருக்கிறார்.


என் கூட இருக்க எல்லோருமே அல்லா கூட இருக்கவங்கதான் புரியுதா.. ஆனா நான் குல்லா போடுற ஆள் இல்ல.. வாட் புரோ.. இட்ஸ் வெரி ராங் புரோ.. குவாட்டர், கோழி பிரியாணி கொடுத்து கட்சிக்கு ஆள் சேக்குறவன் இல்ல இந்த கூல் சுரேஷ்.. நானும் கட்சி ஆரம்பிச்சிட்டேன். தனிச்சி நிக்கப்போறேன். பல கோடி செலவு பண்ணி மாநாடு நடத்தி டிராபிக் ஜாம் பண்ணி, ஹாஸ்பிட்டல், ஸ்கூல், வேலைக்கு போறவங்கள தொந்தரவு பண்ண நான் கட்சி நடத்துல’ என பேசியிருக்கிறார்.

விஜயை பற்றி தவறாக பேசினால் அவரின் ரசிகர்கள் பொங்கி விடுவார்கள். யாராக இருந்தாலும் ஹேஷ்டேக் போட்டு டிரெண்டிங் செய்து நாரடிப்பார்கள். எனவே, அவர்கள் கூல் சுரேஷை என்ன செய்யப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. அதேநேரம் வெறும் அட்டென்சன் சீக்கிங்கிறாக மட்டுமே இதுபோல பேசும் கூல் சுரேஷை விஜய் ரசிகர்கள் கண்டுகொள்ளாமல் விடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story