இந்தா அடுத்த கோமாளித்தனத்த ஆரம்பிச்சுட்டாருல்ல!.. சாட்டையால் சம்பவம் செய்த கூல் சுரேஷ்..
நடிகர் கூல் சுரேஷ்: தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கூல் சுரேஷ். பெரும்பாலும் நடிகர் சந்தானம் திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது படங்களுக்கு ரிவ்யூ சொல்லி வருகின்றார். கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரின் மனதை கவர்ந்த இவர் பலருக்கு பிடித்த போட்டியாளராக இருந்து வந்தார்.
தமிழ் சினிமாவில் வெளியாகும் பல படங்களுக்கு முதல் நாள் முதல் ஷோவை பார்த்துவிட்டு ரிவ்யூ கூறுபவர். அதிலும் இவர் படங்களுக்கு செல்லும்போது ஒரு 20 இளைஞர்களை தன்னுடன் அழைத்துச் செல்வார். அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு படத்திற்கும் ஏற்றபடி புதிய கெட்டப்பில் சென்று படத்திற்கு ரிவ்யூ கூறி வருபவர்.
ஒவ்வொரு திரைப்படத்தை பார்க்க வரும்போது அவர் எந்த கெட்டப்பில் வருவார் என்பதை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த முறை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ட்ரெண்டிங்காக யோசித்து இருக்கின்றார். அதாவது இன்று சமுத்திரகனி, அனன்யா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், எம்எஸ் பாஸ்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரு மாணிக்கம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது.
ஒரு குடும்ப பங்கான கதையை மையமாக வைத்து இயக்கியிருக்கின்றார் நந்தா பெரியசாமி. இன்று வெளியாகி இருக்கும் இப்படத்தை பார்ப்பதற்கு நடிகர் கூல் சுரேஷ் திரையரங்குக்கு வந்திருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் படத்தின் பெயரையும், படத்தில் நடித்தவர்கள், படத்தை தயாரித்தவர்கள், இயக்குனர் என அனைவரது பெயரையும் கூறிக் கொண்டே சாட்டையால் தன்னைத்தானே தாக்கி இருக்கின்றார்.
இதைப் பார்த்துதான் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு விட்டது என்று கூறியும், திமுக ஆட்சியை நீக்க வேண்டும் என்று கூறி தனது இல்லத்திற்கு முன்பு சாட்டையால் அடித்துக் கொண்டு கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இப்படியான நிலையில் இன்று மாலை கூத்து சுரேஷ் தன்னை தானே அடித்துக் கொண்டதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதனை வீடியோவாக எடுத்து இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறார்கள். காலையில் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டது ட்ரெண்டான நிலையில் அந்த ட்ரெண்ட்டை கூல் சுரேஷ் அப்படியே பாலோ செய்திருக்கின்றார் என்று சமூக வலைதள பக்கங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.