கூலியில் ரோலக்ஸ் மாதிரி தெறிக்க விடும் அமீர்கான்... ரஜினிக்கே டபுள் ஹேப்பி!

by SANKARAN |
Rajni, rolex surya, amirkhan
X

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் ஜெயிலரை மிஞ்சும் மாஸ் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் முதன் முறையாக ரஜினியுடன் கைகோர்த்துள்ளதால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ரஜினிகாந்துடன் முதன் முதலாக நெருங்கிய நண்பரான கமலின் மகள் சுருதிஹாசனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதனால் கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. ரசிகர்களுக்கு கமலே ரஜினி உடன் நடித்துள்ளதைப் போன்று ஒரு ஃபீல் ஆகிறதாம்.


இந்தப் படத்தில் நாகர்ஜூனா, சௌபின் சாகிர், உபேந்திரா, சுருதிஹாசன், சத்யராஜ், அமீர்கான்னு பல பெரிய பிரபலங்கள் நடித்துள்ளனர். பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுகிறாராம். படத்திற்கு இசை அனிருத். படம் வரும் ஆகஸ்டு 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தப் படம் குறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு சில தகவல்களைத் தந்துள்ளார். என்னன்னு பாருங்க.

கூலி படத்தோட பர்ஸ்ட் காப்பியை ரீரெக்கார்டிங் பண்ணாமல் முழுவதுமாக ரஜினி பார்த்து முடித்துள்ளார். அதன்பிறகுதான் ரிலீஸ் தேதியையே முடிவு பண்ணிருக்காங்க. டபுள் ஹேப்பின்னு சொன்னாராம் ரஜினி. குறிப்பாக இந்தப் படத்தில் அமீர்கானின் கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்படுமாம்.

விக்ரம் படத்துல ரோலக்ஸா கொஞ்ச நேரத்துல வந்து சூர்யா கலக்கி இருப்பாரு. அது மாதிரி தான் அமீர்கான் கூலியில பண்ணிருக்காரு. வேற லெவல்தானாம். ரஜினிகாந்த் இறங்கி பண்ணிருக்காரு. அமீர்கான் பேசுனதை அப்படிக் கொண்டாடினாராம். எண்ணூர் துறைமுகத்திலும், ராஜஸ்தானிலும் படப்பிடிப்பு நடத்தினார்களாம்.

ரஜினி தவிர நாகர்ஜூனா, சத்யராஜ் எல்லாரும் இருக்காங்க. பக்கா கமர்ஷியல் படம். தளபதி தேவாவைத் தாண்டி இந்தத் தேவா 2கே கிட்ஸ் மத்தியிலும் பேசப்படுமாம்.


ரஜினி கூலி, ஜெயிலர் 2ன்னு பல பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். அவருடைய அடுத்த படத்துக்காக இன்னைக்கு பல தயாரிப்பாளர்கள் ஆந்திரா, கர்நாடகாவில இருந்து வந்து போயஸ் கார்டன்ல கியூவுல நிக்கிறாங்களாம். அதுக்கு முக்கிய காரணம் அவரது எளிமை தான். இதுதான் அவரது மிகப்பெரிய வெற்றிக்கான ஒரு அடையாளம். இன்னைக்கு உள்ள இளைய தலைமுறை நடிகர்களுக்கும் டஃப் கொடுக்குற ஒரே நடிகர் ரஜினி. அதுதான் அவரது பலம் என்கிறார் செய்யாறு பாலு.

Next Story