Coolie: ரஜினிக்கு முதல் A சர்ட்டிபிகேட் படம்!.. கூலி வசூல் பாதிக்குமா?..

by Akhilan |   ( Updated:2025-08-02 08:13:25  )
Coolie: ரஜினிக்கு முதல் A சர்ட்டிபிகேட் படம்!.. கூலி வசூல் பாதிக்குமா?..
X

Coolie: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தின் திடீர் அப்டேட் கோலிவுட் சினிமா வட்டாரத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

தமிழ் சினிமா இயக்குனர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். தொடக்கத்தில் மாநகரம் தொடங்கி லியோ படம் வரை எல்லா படங்களையுமே வெற்றி படங்களாகவே கொடுத்து வந்தார். இதை தொடர்ந்து ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்திற்கு கூலி எனப் பெயரிடப்பட்டு படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபல நடிகர்களை தன் படத்தில் நடிக்க வைக்கும் முடிவிற்கு வந்து விட்டார் ரஜினிகாந்த்.

வேட்டையனில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது கூலி படத்தில் அமீர்கான், பாலையா, உபேந்திரா, ஷொபீன் ஷாபீர், நாகர்ஜூனா உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக அறிவித்து உள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது படம் ரிலீஸை எட்டி இருக்கிறது. ஆகஸ்ட் 14ந் தேதி ரிலீஸ் செய்யப்பட இருக்கும் நிலையில் படத்தின் புரோமோஷன் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 1000 கோடி படம் வசூல் கொடுக்கும் என பலரும் நினைத்து இருந்தனர்.

இப்படத்தில் ஏற்கனவே கேங்ஸ்டர் படமாக இது இருக்காது என லோகேஷ் சொல்லி இருந்தார். இந்நிலையில், இப்படத்தின் சென்சார் முடிந்திருக்கும் நிலையில் படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். இது ரஜினிகாந்தின் முதல் ஏ சர்டிபிகேட் படமாக அமைந்து இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், தற்போது ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டு இருப்பதால் லோகேஷின் டிரேட் மார்க் கத்தி, ரத்தம் இப்படத்தில் இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. என்ன மாதிரி படமாக இருக்கும் என்றும் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. 1000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட இப்படத்திற்கு ஏ சர்டிபிகேட் அதிர்ச்சிதான் என்றாலும் லோகேஷ் படங்களுக்கு இது சாதாரணம்தான் என்பதால் வசூல் பாதிக்காது எனவும் கூறப்படுகிறது.

Next Story