coolie day 2 collection: கூலி vs லியோ… எந்த ஏரியாவில் யார் கில்லி… தமிழ்நாடு மகுடம் யாருக்கு தெரியுமா?
coolie day 2 collection: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் கூலி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகி இருக்கும் நிலையில் எந்தெந்த ஏரியாவில் லியோவை முந்தியது, எந்த ஏரியாவில் கோட்டை விட்டது என்ற அப்டேட் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ஐந்தாவது திரைப்படமாக வெளிவந்து இருப்பது ரஜினிகாந்தின் நடிப்பில் கூலி. இப்படத்தில் 5 மொழி பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். இந்தி பிரபலமான அமீர்கான் கிளைமேக்ஸில் ஒரு சிறப்பு கேமியோவில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதலில் இப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ரஜினிகாந்தின் கேரியர் மற்றும் லோகேஷ் கனகராஜின் டைரக்ஷன் என்பதால் ரசிகர்களும் இப்படத்திற்கு பெரிய அளவில் காத்திருந்தனர். ஆனால் முதல் ஷோவிற்கு பின்னர் கலவையான விமர்சனங்களே இப்படம் பெற்றது.
இப்படத்தின் முதல் நாள் வசூல் கிட்டத்தட்ட 151 கோடி ரூபாய் எனக் கூறப்பட்டு இருக்கிறது. இப்படத்திற்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வசூலிலும் 500 கோடியை தாண்டி குவித்து பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.
இந்நிலையில் விஜய், ரஜினி இருவருக்கும் போட்டி என்பதால் இந்த இரண்டு படங்களின் வசூல் விவரங்கள் தொடர்ந்து விவாதத்தில் இருக்கிறது. லியோ 148.5 கோடி ரூபாயை வசூல் செய்திருந்தாலும் கூலி திரைப்படம் உலகளாவில் நான்கு பகுதிகளில் மட்டுமே வெற்றியை தட்டி இருக்கிறது.
அதிலும் முக்கியமாக தமிழ்நாட்டில் கூலி 28 கோடியை மட்டுமே முதல் நாள் வசூல் குவித்தது. ஆனால் லியோ முதல் நாளில் 35 கோடியை பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. அதுபோல கேரளா மற்றும் கர்நாடகாவில் லியோ திரைப்படம் 9.75 மற்றும் 12.50 கோடி வசூல் பெற்று கூலியை விட 1 முதல் 2 கோடி வரை அதிகம் பெற்று முதலிடத்திலே இருக்கிறது.
அமெரிக்காவில் 73 ஆயிரம் டாலர் மற்றும் ஆந்திரா பகுதிகளில் 4.5 கோடி மட்டுமே லியோவை முந்தி இருக்கிறது. கிட்டத்தட்ட தென்னிந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்னும் லியோவின் ரெக்கார்ட்டை தட்ட முடியாமல் கூலி தோல்வியை தழுவி இருக்கிறது.
