கூலி படத்துக்கு வில்லன் அந்த பிரபலமா? அப்போ ரொம்ப டஃப் கொடுப்பாரே...!

by sankaran |
coolie rajni
X

த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான வேட்டையன் படம் எதிர்பார்த்த அளவு வசூலை ஈட்டவில்லைன்னு பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில நாள்களில் படம் வெற்றியா, தோல்வியான்னு தெரிந்து விடும் என்கிறார்கள். இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படம் சன்பிக்சர்ஸ் தயாரிக்க, லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் அதிரடியாக உருவாகி வருகிறது.

ஜெயிலரை விட ஒரு படி மேலாகப் போய் 1000 கோடியைத் தொட வேண்டும் என்கிற எண்ணத்தில் படக்குழுவினர் உழைப்பைக் கொட்டி வருகிறார்கள். ஒரு பக்கம் ரஜினியின் உடல்நிலை சரியில்லாமல் போனது. அதன்பிறகு ஓய்வு எடுக்கச் சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்றும் சொல்கிறார்கள். இதுகுறித்தும், கூலி படத்தின் அப்டேட் குறித்தும் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கூலி படத்தில் அமீர்கான் 100 சதவீதம் இருக்காரு. அவரு ரொம்ப ரொம்ப சின்ன ரோல். 5 அல்லது 8 நிமிஷம் இருக்கப் போறாரு. ரோலக்ஸ் மாதிரி ரோலான்னு கேட்டாங்க. இருக்கலாம்னு சொல்கிறார் அந்தனன்.

ஜெயிலர் கலெக்ஷனை கோட் முறியடிக்குமா, வேட்டையன் முறியடிக்குமான்னு கேட்டாங்க. ஆனா நான் இருக்கேன்டான்னு வர்றாரு கூலி. ரஜினி அக்டோபர்.16ம் தேதி சூட்டிங் போயிருக்கணும். ஆனா போனதா தெரியல. சன் பிக்சர்ஸப் பொருத்தவரைக்கும் நடிகர் நடிகைகள் கட்டாயமா புரொமோஷனுக்கு வரணும்கறதுல தெளிவா இருக்காங்க.

அஜீத் அதனால தான் சன் பிக்சர்ஸை வேணாம்னுட்டாரு. அவரு பேட்டி கொடுக்க மாட்டாரு. புரொமோஷனுக்குப் போக மாட்டாரு. ஆனா கூலியைப் பொருத்தவரை எல்லாரும் புரொமோஷனுக்கு வரணும். ஆடியோ லாஞ்ச்சுக்கு வரணும்.


எல்லா லாங்குவேஜ்லயும் அந்தப் படம் போய் சேர்ந்துடும். அதனால சன்பிக்சர்ஸ் அதைத் தெளிவா சொல்லிடுவாங்க. அதனால 1000 கோடியை படம் நிச்சயம் தொடுமான்னு தெரியாது. அதற்கான முயற்சி நிச்சயமா இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கூலி படத்தில் ரோலக்ஸ் மாதிரி கேரக்டர் என்ற கேள்விக்கு இருக்கலாம்னு சொன்ன அந்தனன் பதிலை வைத்துப் பார்த்தால் அமீர்கான் தான் படத்தில் கேமியோ வில்லனாக இருப்பார்னு தெரிகிறது. அப்படிப் பார்க்கும்போது பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் பிரபல நடிகர் இவர். ரஜினிக்கு ரொம்பவே டஃப் கொடுத்துவிடுவாரேன்னும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தில் சத்யராஜ் கூட ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் அவர் வில்லன் இல்லை என்றும் சொல்கிறார்கள். ஆனால் இதற்கு முன் ரஜினியுடன் பல படங்களில் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story