1. Home
  2. Cinema News

coolie movie box office collection: லியோ படத்தின் வசூலை கூலி தட்டி தூக்கினாலும் இதில கோட்ட விட்டுடுச்சே!...

coolie movie box office collection: லியோ படத்தின் வசூலை கூலி தட்டி தூக்கினாலும் இதில கோட்ட விட்டுடுச்சே!...

coolie movie box office collection: : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் கூலி திரைப்படத்தின் வசூல் விஜயின் லியோ படத்தினை தாண்டி இருந்தாலும் விஜய் ரசிகர்கள் ரஜினி தரப்பை கலாய்த்து வருவதை பார்க்க முடிகிறது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜின் ஐந்தாவது படமாக வெளிவந்திருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

அதுமட்டுமல்லாமல் கன்னடத்தில் இருந்து உபேந்திரா, தெலுங்கில் இருந்து நாகர்ஜூனா, மலையாளத்தில் இருந்து ஷெளபீன், இந்தியில் இருந்து அமீர்கானும் நடித்து ஆச்சரியப்படுத்தினர். அதிலும் மல்டி ஸ்டார் நடிக்கும் ரஜினி படத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு குவிந்து வருகிறது.

இதனால் ரஜினியும் தற்போது இதற்கு அமோதித்து அடுத்து வரும் ஜெயிலர் 2 கூட இதே பாணியில் தயாராகி வருகிறது. இந்நிலையில் கூலி படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் 1000 கோடி வசூலை குவிக்கும் என நம்பப்பட்டது. ஏனெனில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வரும் படங்களுக்கு எப்போதுமே பெரிய வரவேற்பு இருக்கும். அந்த வகையில் கூலி பெரிய வெற்றியாக அமையும் என கணிக்கப்பட்டது. 

ஆனால் 14ந் தேதி ரிலீஸாகிய இப்படத்தின் முதல் காட்சிக்கு பின்னர் கலவையான விமர்சனங்கள் குவிய படத்தின் வசூல் அடி வாங்க துவங்கி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் முதல் நாள் வசூல் விவரம் வெளியான நிலையில் கூலி திரைப்படம் உலகளவில் முதல் நாள் 151 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. 

coolie movie box office collection: லியோ படத்தின் வசூலை கூலி தட்டி தூக்கினாலும் இதில கோட்ட விட்டுடுச்சே!...
coolie movie box office collection

இப்படத்தில் 5 மொழி ஸ்டார்கள் இணைந்து நடித்திருந்தனர். புரோமோஷன் பெரிய அளவில் செய்யப்பட்டது. பிரம்மாண்டமான ஆடியோ ரிலீஸ், பெரிய எண்ணிக்கையில் ரிலீஸ் செய்தே இந்த வசூல் தான் கிடைத்து இருக்கிறது. அதே நேரத்தில் விஜயின் நடிப்பில் லியோ திரைப்படம் முதல் நாள் உலகளவில் 148.5 கோடி வசூல் செய்திருந்தது. 

விஜய் மட்டுமே பெரிய ஸ்டார், ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி இல்லை. பெரிய அளவில் புரோமோஷனும் செய்யப்படவில்லை. அப்படி இருந்தும் கூட ஒரு சின்ன வித்தியாசத்தில் மட்டுமே லியோவை கூலி தாண்டி இருக்கிறது. இதனால் இந்த வெற்றியால் தளபதியை உங்களால் வென்று விட முடியாது எனவும் கேலி செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.