கூலி படத்தின் பட்ஜெட் இவ்வளவு கோடியா?!... ரஜினி சம்பளம் மட்டும் இவ்வளவா?!...

Coolie: ரஜினியும் லோகேஷ் கனகராஜும் கூலி படத்தில் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள். சினிமா உலகில் சில காம்பினேஷன்கள் மட்டுமே ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். மணிரத்னம் - கமல் கூட்டணி போல. மாநகரம் கைதி, மாஸ்டர். விக்ரம், லியோ போன்ற படங்களை இயக்கி கவனிக்கத்தக்க இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ்.
ரஜினியும், லோகேஷ் கனகராஜும் சில வருடங்களுக்கு முன்பே இணையவிருந்தனர். அந்த படத்தை ரஜினியின் நண்பரும், நடிகருமான கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது டேக்ஆப் ஆகவில்லை. அதன்பின்னர் கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ்.
அந்த படம் சூப்பர் ஹிட் அடித்து 450 கோடிக்கும் மேல் வசூல் செய்ததால்தான் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க ரஜினியே ஒப்புக்கொண்டார். அப்படி உருவான படம்தான் கூலி. வழக்கம்போல் போதைப்பொருள் பின்னணியில் இயங்கும் கேஙஸ்டர்களை மையமாக வைத்தே லோகேஷ் இப்படத்தை இயக்கியிருப்பார் என கணிக்கப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
பல கோடிகளை கல்லா கட்டுவதற்காக இப்படத்தை ஒரு பேன் இண்டியா படமாக உருவாக்கியுள்ளனர். தெலுங்கிலிருந்து நாகார்ஜுனா, மலையாளத்திலிருந்து சௌபின் சாஹிர், கன்னடத்திலிருந்து உபேந்திரா ஆகியோரை இறக்கியுள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற ஆகஸ்டு 14ம் தேதி வெளியாகவுள்ளது.
கூலி திரைப்படம் சுமார் 375 கோடி செலவில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினிக்கு 150 கோடியும் லோகேஷ் கனகராஜுக்கு 50 கோடியும் சம்பளமாக கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. விஜயின் கோட் படம் 400 கோடி செலவில் உருவானது. விஜய் ரஜினியை தாண்டிவிட்டதாக பேசப்படும் நிலையில் கூலி படம் 375 கோடி செலவில் உருவாகியுள்ளது.
கூலி படம் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரஜினிக்கான காட்சிகளை மிகவும் ரசித்து இயக்கியுள்ளார் லோகேஷ் என சொல்லப்படுகிறது. கண்டிப்பாக இப்படம் பல நூறு கோடி வசூலை அள்ளும் என்றே கணிக்கப்படுகிறது.