கூலி டிரெய்லரில் விக்ரம்.. போஸ்டரில் லியோ ரெஃப்ரன்ஸ்… LCU இருக்கா? இல்லையா?…
Coolie: மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய ஐந்து திரைப்படங்களை மட்டுமே இயக்கி கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவரின் ஒரு படத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் இவரின் அடுத்த அல்லது மற்றொரு படத்திலும் வருவதை ரசிகர்கள் எல்.சி.யூ (LCU) என அழைக்க துவங்கினார்கள். எல்சியூ என்றால் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என அவர்களே பெயர் வைத்துக் கொண்டார்கள். இதை லோகேஷ் கனகராஜும் ஏற்றுக்கொண்டார்.
கைதி படத்தில் வரும் கார்த்தியின் கதாபாத்திரம் விக்ரம் படத்தில் ஒரு காட்சியில் பயன்படுத்தப்பட்டிருக்கும். அவரின் முகம் காட்ட வில்லை என்றாலும் வட இந்தியாவில் அவர் குளித்துக் கொண்டிருப்பது போல ஒரு காட்சி வரும். அதேபோல் கைதி படத்தில் வரும் ஒரு போலீஸ் கதாபாத்திரம் லியோ படத்தில் விஜயின் வீட்டிற்கு பாதுகாப்பு கொடுப்பது போல காட்சியை வைத்திருப்பார் லோகேஷ்.
எனவே லோகேஷ் ஒரு படத்தை இயக்கினால் இந்த படத்தில் எல்.சி.யூ இருக்கா என எல்லோரும் கேட்கத் துவங்கி விட்டனர். ரசிகர்களிடமும் அந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. லோகேஷ் ரஜினியை வைத்து கூலி படத்தை துவக்கிய போதும் இதிலும் எல்.சி.யூ இருக்கிறதா? அவரின் முந்தைய படங்களில் வந்த கதாபாத்திரங்கள் இதில் வருகிறதா? என்கிற எதிர்பார்ப்பு பலரிடமும் எழுந்தது. இது பற்றி லோகேஷிடமே கேட்டபோது கூலி படத்தில் எல்.சி.யூ இல்லை. இது ஒரு தனிக் கதை என சொன்னார்.
கூலி படத்தின் டிரைலரில் சத்யராஜ் ‘முப்பது வருஷமா ஒருத்தன ஆப் லைன்ல வச்சிருக்கேன்’ என பேசும் என பேசுகிறார். கமலை வைத்து லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்திலும் ‘30 வருஷமா ஒருத்தர் கோஸ்ட்டா வாழ்ந்திருக்கார்’ என்கிற வசனம் வரும். எனவே இது எல்சியூதான் என சிலர் சொன்னார்கள்.
இந்நிலையில்தான் கூலி தொடர்பான போஸ்டர் ஒன்றில் CVL என தலைகீழாக எழுதப்பட்டிருக்கிறது. இதன் ஃபுல்பார்ம் Coolie Vikam Leo என ரசிகர்கள் கற்பனை செய்து டிகோட் செய்து வருகிறார்கள். கூலி படத்தில் LCU இருக்கிறதா என்பது நாளை படம் பார்க்கும்போது தெரிந்துவிடும்.
