Coolie movie Review: LCUவா? இல்லையா? ‘கூலி’ படம் பார்த்து ரசிகர்கள் விமர்சனம்
coolie movie Review: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் கூலி. வழக்கம் போல ரசிகர்கள் இந்த படத்தை காண கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு செல்வதை பார்க்க முடிகிறது. பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் அதன் முதல் நாள் காட்சி ஒரு திருவிழாவாகத்தான் இருக்கும். அதிலும் இது ரஜினியின் 50 ஆவது ஆண்டு விழா. அதில் இப்படி ஒரு பிரம்மாண்ட படம் வெளியாவது ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாகவே பார்க்கப்படுகிறது .
சர்வதேச அளவில் வெளியான நிலையில் படத்தைப் பற்றி சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. தமிழ்நாட்டில் முதல் நாள் காட்சியாக 9:00 மணிக்கு இந்த படம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாகவே வெளிநாடுகளில் படம் ரிலீஸ் ஆகிவிட்டது. நமது அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா ,கர்நாடகா போன்ற மாநிலங்களில் முதல் நாள் கட்சியாக ஆறு மணிக்கு இந்த படம் ரிலீஸ் ஆகிவிட்டது .
அதனால் அங்குள்ள ரசிகர்கள் படத்தை பற்றி அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். இதுவரை படத்தை பற்றி பாசிட்டிவான விமர்சனத்தையே ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக இந்த படத்தில் ரஜினியின் வசீகர நடிப்பு லோகேஷின் விறுவிறுப்பான அதிரடி ஆக்சன் காட்சிகள் என கதையை ஒரு உணர்வு பூர்வமாக கொண்டு சென்றிருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதில் கர்நாடகாவில் படத்தை பார்த்த ஒரு ரசிகர் இந்த படம் எல்சியூ-வா இல்லையா என்பதை பற்றி கூறியிருக்கிறார். அவரிடம் விக்ரம் படமா? கைதி படமா என்று கேட்க யாரு படமும் இல்லை. இது முழுக்க முழுக்க ரஜினியின் படம். இது பக்கா தலைவர் படம். மாஸ் காட்டி இருக்கிறார். குறிப்பாக அனிருத் பிஜிஎம் படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்று இருக்கிறது.
முதல் பாதி விறுவிறுப்பாக இருந்தது. ரஜினியின் நடிப்பு இந்த படத்தில் அற்புதமாக இருந்தது. அதிலும் விண்டேஜ் ரஜினியை கொண்டு வந்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என அந்த ரசிகர் கூறியிருக்கிறார். படம் முழுக்க முழுக்க விறுவிறுப்பாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கிளைமாக்ஸ் சிறப்பாக இருக்கிறது என்றும் கூறி வருகின்றனர்.
