கூலி படத்துக்கு குறுக்க வந்த அந்த ஹீரோ!.. 1000 கோடிக்கு ஆப்பு வச்சிட்டாரே!....

by MURUGAN |
coolie
X

Coolie: தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் கூலி. ஏனெனில், லோகேஷ் கனகராஜும், ரஜினியும் இந்த படத்தில் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள். கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ போன்ற படங்கள் லோகேஷை எல்லோராலும் கவனிக்கப்படும் இயக்குனராக மாற்றியிருக்கிறது.

ஏனெனில் ஹாலிவுட் ஸ்டைலில் பக்கா ஆக்சன் படங்களை அவர் உருவாக்கி வருகிறார். ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை அவரின் படங்கள் கொடுக்கிறது. அதை லோகி யூனிவர்ஸ் என ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ரசிகர்களுக்கு ஒரு இருண்ட உலகை லோகேஷ் காட்டுகிறார். குறிப்பாக போதை மருந்து கடத்தலுக்கு பின் இருக்கும் கும்பல்களை மையப்படுத்தியே அவர் திரைப்படங்களை உருவாக்குகிறார்.


லோகேஷும், ரஜினியும் ஏற்கனவே ஒரு படத்தில் இணைவதாகவும், அப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை. அதன்பின்னரே கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார் லோகேஷ். இப்போது கூலி படம் மூலம் லோகேஷும் ரஜினியும் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இது பேன் இண்டியா படம் என்பதால் நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா என பலரும் நடித்திருக்கிறார்கள். மேலும் நடிகர் சத்யராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் தொடர்பான ஒரு வீடியோவையும் படக்குழு சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற ஆக்ஸ்டு மாதம் 14ம் தேதி வெளியாகிறது. நாம் அறிவித்துவிட்டதால் இந்த தேதியில் வேறு படங்கள் ரிலீஸாகாது. வசூலை அள்ளிவிடலாம் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் கணக்குப்போட்டது. ஆனால், ஜூனியர் என்.டி.ஆரும், ஹிரித்திக் ரோஷனும் இணைந்து நடித்துள்ள வார் 2 படம் இதே தேதியில் ரிலீஸ் என அறிவித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள்.

இதனால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருப்பதால் ஆந்திராவில் வார் 2 படத்துக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படும். அதேபோல், ஹிருத்திக் ரோஷன் ஹீரோ என்பதால் வடமாநிலங்களில் அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படும். எனவே, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் கூலி படத்தின் வசூல் பாதிக்கும் நிலை ஏற்படும். கூலி படம் 1000 கோடியை வசூல் செய்யும் என சிலர் சொல்லி வரும் நிலையில் இதை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

Next Story