கூலி படத்தின் பீரித்தி கேரக்டர் இப்படிதான் இருக்கும்? ஓபனா சொன்ன ஸ்ருதிஹாசன்!

by Akhilan |
கூலி படத்தின் பீரித்தி கேரக்டர் இப்படிதான் இருக்கும்? ஓபனா சொன்ன ஸ்ருதிஹாசன்!
X

Coolie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் பீரித்தி கேரக்டர் குறித்து அவர் சொல்லியிருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளாக ஸ்ருதிஹாசன் சினிமாவில் அறிமுகமானாலும் அவர் தன்னுடைய திறமையால் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருவது தான் உண்மை. பாடல், நடிப்பு என பன்முகம் காட்டும் ஸ்ருதிக்கு இதுவரை வலுவான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை.

சில படங்களில் ஒரு சாதாரண கேரக்டராக வந்து சென்று தான் நடித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். வேதாளம் படத்தில் அஜித்தின் ஜோடியாக நடித்தாலும் அவருக்கு ஒரே ஒரு பாடலைக் கொடுத்து சிறுத்தை சிவா ஏமாற்றி இருந்தார். தங்கை லட்சுமிமேனனை விட ஸ்ருதியின் கதாபாத்திரம் முக்கியமானதாக அமைக்கப்படாமல் போனதுதான் துரதிஷ்டம்.

இதுபோலவே நடிகர் விஜயின் காதலியாக புலி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் படத்தில் மொத்தமே இவருக்கு சொற்ப காட்சிகளை அமைக்கப்பட்டது. இரண்டாவது நாயகியாக வந்த ஹன்சிகாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

அல்லது சில படங்களில் ஸ்ருதிக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்தாலும் பாதியிலேயே கொலை செய்யும் படி அமைத்து விடுவார்கள். இந்நிலையில் தான் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

கமலும், ரஜினியும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும் இந்த வாய்ப்பை ஸ்ருதிக்கு கொடுத்தது லோகேஷ் தான். அப்படி இந்த படத்தில் அவர் பிரீத்தியாக நுழைந்து நடித்து இருக்கும் அனுபவங்கள் குறித்து தன்னுடைய பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

நான் கூலி திரைப்படத்தில் பிரீத்தி என்னும் கேரக்டரில் நடித்திருக்கிறேன். எனக்கு அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடித்திருக்கிறார். அவளுக்கு தங்கைகளும் இப்படத்தில் உள்ளனர். அதைத்தவிர இந்த படம் குறித்து நான் வேறு எதுவும் சொல்ல முடியாது.

நான் இந்த படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளிவந்தவுடன் இந்த படத்திலும் உங்களை கொலை செய்து விடுவார்களா என கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அதுபோல இங்கு எதுவும் நடக்கவில்லை. நான் இந்த படத்தில் எந்த சண்டைக் காட்சிகளிலும் நடிக்கவும் இல்லை.

ஆண்கள் நிறைந்த உலகில் ஒரு அழகிய பெண்ணாக இப்படத்தில் நடித்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் தமிழ். தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளுக்கு என்னுடைய கேரக்டருக்கு நானே டப்பிங் பேசி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Next Story