கதறல்ஸ் ஆரம்பிச்சாச்சு.. டிக்கெட் புக்கிங்கில் விழுந்த மரண அடி.. வார்-2 வா? கூலியா ?
தமிழ் சினிமாவில் இந்த வருடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் இந்த திரைப்படம் பேன் இந்தியா அளவில் உருவாகி நாளை வெளியாகிறது. அனிருத் இசையில் இந்த படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று படத்திற்கு கூடுதல் கவனத்தை சேர்த்துள்ளது.
இந்தப் படத்திற்கு இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு காரணம் லோகேஷ்-ரஜினி கூட்டணிதான். காரணம் லோகேஷ் கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ என அனைத்து படங்களும் பெரிய வெற்றி பெற்றது. அது மட்டும் இல்லாமல் இந்த முறை ரஜினியுடன் இணைந்துள்ளார். அதனாலேயே இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது. இதுவரை லோகேஷ் இயக்கிய அனைத்து திரைப்படத்திற்கும் U/A சான்றிதழ் கிடைத்திருந்தது. ஆனால் தற்போது கூலி படத்திற்கு A சான்றிதழ் கிடைத்துள்ளது.
இதற்கு லோகேஷ் மீது பல விமர்சனங்கள் எழுந்தது. இதனால் படத்திற்கு பெரிதாக புக்கிங் இருக்காது. படத்தின் வசூல் அடி வாங்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் இதன் ப்ரீ புக்கிங் அடித்து துவம்சம் செய்கிறது. நாளை கூலி படத்துடன் வார்-2 படமும் ரிலீஸ் ஆகிறது. ஹிரித்திக் ரோஷன் மட்டும் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் இருக்கிறது.
இதனால் கூலி படத்தில் புக்கிங் அடி வாங்கும் என்று சில விமர்சனகர்களின் கருத்தாக இருந்தது.
அதை எல்லாம் தவிடு பொடியாக்கி புக் மை ஷோ வில் கடந்த ஒரு மணி நேரத்தில் வார்-2 படத்திற்கு 16,000 டிக்கெட்டுகளும் கூலி படத்திற்கு 23 ஆயிரம் டிக்கெட்டுகளும் புக் செய்துள்ளனர். இந்நிலையில் 75 வயதிலும் தலைவர் மாஸ் காட்டுகிறார் என்று சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் அலப்பறை செய்து வருகின்றனர்.
