Coolie: 50வது வருஷம்! ரஜினி சொன்னது என்ன? பெருமிதத்துடன் லதா ரஜினி
Coolie movie review: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கூலி திரைப்படம் இன்று உலகெங்கிலும் ரிலீஸ் ஆகி இருக்கின்றது. படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இதுவரை இல்லாத அளவிற்கு கூலி திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே அதிக ஆவல் இருந்து வந்தன. முதல் நாளிலேயே இந்த திரைப்படம் பெரிய வசூலை நிகழ்த்தலாம் என கணிக்கப்பட்டது. நீண்ட வருடம் கழித்து ஏ சான்றிதலுடன் வெளியாகும் ரஜினிகாந்த் திரைப்படம் என்பதால் அப்படி என்ன இருக்கிறது இந்த படத்தில் என்பதை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே வன்முறை காட்சிகள் அதிகமாகவே இருக்கும். ஆனால் இது ஏ சான்றிதழுடன் வெளியாவதால் இன்னும் அதிகமான வன்முறை காட்சிகள் இடம் பெற்று இருக்கிறதா என்ற கேள்வியும் இருந்து வருகிறது. இந்தியா உட்பட 100 நாடுகளில் கிட்டத்தட்ட 5000 திரைகளில் இந்த படம் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்ல ரஜினியின் திரைப்படங்களில் அதிக திரைகளில் வெளியாகும் முதல் படம் என்ற பெருமையையும் கூலி திரைப்படம் அடைந்துள்ளது .
தமிழ்நாட்டில் கூலி திரைப்படம் முதல் காட்சியாக 9:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. ஆனால் கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் காலை ஆறு மணி முதலே அதனுடைய முதல் காட்சி தொடங்கிவிட்டது. அதனால் அங்குள்ள ரஜினி ரசிகர்கள் படத்தை பார்த்து காலையிலிருந்து எக்ஸ் வலைதளத்தில் படத்தை பற்றி பல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதுவரை பாசிட்டிவான விமர்சனங்களே வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் கூலி திரைப்படத்தை பார்க்க பல பிரபலங்கள் முண்டியடித்து வருகின்றனர். தனுஷ் அவருடைய மகனுடன் ரோகிணி திரையரங்கிற்கு சற்று நேரத்திற்கு முன்பு தான் வந்தார். லோகேஷ் கனகராஜ், அனிருத் ,சாண்டி மாஸ்டர் என அடுத்தடுத்து பிரபலங்கள் படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தை பார்க்க ரோகிணி திரையரங்கிற்கு வந்தார்.
அவரிடம் பத்திரிக்கை நிருபர்கள் பல கேள்விகளை கேட்டனர். குறிப்பாக ரஜினியின் 50 ஆவது பொன்விழா வருடம் இது. அவர் என்ன சொன்னார் என்ற ஒரு கேள்வியை லதா ரஜினிகாந்திடம் முன் வைத்தனர். அதற்கு அவரும் காத்திருக்கிறார் என்று பதிலளித்தார். அதுமட்டுமல்ல இத்தனை வருடங்களாக ரசிகர்கள் அவருக்கு அளித்த அன்பையும் ஆதரவையும் பார்க்கும் பொழுது நன்றி சொன்னால் போதாது.
அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். இந்த நேரத்தில் கே. பாலச்சந்தர், பஞ்சு அருணாச்சலம், நடிகர் சோ இவர்களை எல்லாம் நான் மிஸ் பண்ணுகிறேன். கூலி திரைப்படத்தை பார்த்து ரஜினி சாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார். ரசிகர்களின் விமர்சனத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்று லதா ரஜினிகாந்த் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
