இது ஒன்னு போதுமே.. ‘கூலி’ படப்பிடிப்பில் இருந்து வெளியான புகைப்படம்.. ரஜினி மட்டுமில்ல

coolie: ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் கூலி. வேட்டையன் திரைப்படத்திற்கு பிறகு ரஜினி நடித்துள்ள திரைப்படம் தான் கூலி .கடைசியாக ரஜினி நடிப்பில் ஜெயிலர் மற்றும் வேட்டையன் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் வெற்றியடைய அடுத்து பெரிய எதிர்பார்ப்பில் கூலி திரைப்படம் இருக்கிறது. லோகேஷ் ரஜினி காம்போ என்பது இன்னும் படத்திற்கு கூடுதல் ஹைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதுவும் மல்டி ஸ்டார் படமாக இந்த படம் உருவாகி வருகிறது. ரஜினியுடன் நாகார்ஜுனா ,அமீர்கான், உபேந்திரா, சௌபின் சாஹிர், சத்யராஜ் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். சுருதிஹாசன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்த நிலையில் இன்று படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களின் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதுவும் படப்பிடிப்பில் எந்த மாதிரி கெட்டப்பில் அவர்கள் இருக்கிறார்கள் என செட்டில் இருந்தவாறே அந்த புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இன்று லோகேஷ் பிறந்தநாள் என்பதால் கூலி திரைப்படத்தின் ஏதாவது ஒரு அப்டேட் வரும் என ரசிகர்களும் ஆர்வமாக காத்திருந்தனர்.
அதற்கு ஏற்ப ஒவ்வொரு புகைப்படமாக வெளியாகி ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான ட்ரீட்டை வைத்திருக்கிறது பட குழு. அதில் நாகார்ஜுனா ,சத்யராஜ் ,சுருதிஹாசன், ரஜினி என வித்தியாசமான கெட்டப்பில் இருப்பது ரசிகர்களுக்கு ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சினிமா துறைக்கு ரஜினி வந்து ஏறக்குறைய 50 ஆண்டுகள் நிறைவடைய இருக்கின்றன. இந்த 50 வது வருடத்தில் கூலி திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பிலும் இருக்கிறது. இது மட்டும் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்து விட்டால் ரஜினிக்கும் இந்த 50 வது ஆண்டை மன நிறைவோடு கொண்டாடுவார் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக ரஜினி பல இயக்குனர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த் பட அறிவிப்பையும் எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் அவர் தனது பயோபிக்கை எழுதும் முயற்சியிலும் இருக்கிறார் என்பது போன்ற தகவலும் வெளியானது.