ரஜினியின் கூலி பட டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்... பக்கா பிளான் ரெடி!

அஜீத்தின் குட் பேட் அக்லி, ரஜினியின் கூலி மற்றும் ஜெய்லர் 2 பட அப்டேட்டுகளைப் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.
வேல்ஸ் நிறுவனம் ரஜினியையும், கமலையும் இணைத்து படம் எடுக்கணும்னு ஆசைப்படுகிறது. ஐசரி கணேஷ் அதற்கு ஆசைப்படுகிறார். இருந்தாலும் அப்படி நடந்துவிடக்கூடாது என்று கூட ரஜினி அதற்குப் பிடி கொடுக்காமல் தள்ளித் தள்ளிப் போகலாம். மணிரத்னம் சார் நினைச்சாருன்னா ரஜினியையும், கமலையும் இணைத்துப் படம் எடுக்க முடியும்.
ஆனால் அவர் ஐசரி கணேஷூக்காக படம் இயக்குவாரான்னு தெரியல. ஏன்னா அவரே தனியாக மெட்ராஸ் டாக்கீஸ்னு நிறுவனம் வச்சிருக்காரு. அதனால மணிரத்னம் சாரைப் பொருத்தவரை தக்லைஃப் படத்துக்குப் பிறகு ஓகே காதல் கண்மணி மாதிரி ஒரு காதல் படம்தான் எடுப்பதாக இருக்கிறார்.
அதன்பிறகு தக்லைஃப் 2 எடுக்கிறாரான்னு தெரியல. ரஜினியைப் பொருத்த வரை கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது ஜெய்லர் 2 படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். அதன்பிறகு அவர் என்ன படம் நடிக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை.
கூலி படத்தின் டிரெய்லர் இன்னும் ஏன் வரலைன்னு கேட்குறாங்க. அது எப்போ வரும்னு கேட்குறாங்க. சமீபத்தில் குட்பேட் அக்லி படத்தோட மேக்கிங் வீடியோ வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. குட்பேட் அக்லி டிரெய்லரும், கூலி டிரெய்லரும் ஒண்ணா வந்தா சோஷியல் மீடியாவுல ரசிகர்கள் அடிச்சிக்குவாங்க. அதனால ரெண்டும் ஒண்ணா வராம இருக்குறது நல்லது. லோகேஷ் அந்த விஷயத்துல தெளிவா இருக்காரு. கூலி படத்தோட டிரெய்லர் விரைவில் ஒரு நல்ல நாளில் வரும் என்கிறார் வலைப்பேச்சு அந்தனன்.
கூலி படம் வரும் மே 1ம் தேதியும், குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் 10ம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கூலி படத்தின் டிரெய்லர் வரும் தமிழ்புத்தாண்டு அன்று வெளிவர வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்தில் கூலி படத்தின் சூப்பர் ரேப் ஒன்று வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த், நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், சோபன்ஷாகிர், சுருதிஹாசன், அமீர்கான் என பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ள படம் கூலி. அன்பறிவு ஆக்ஷன் காட்சிகளை எடுத்துள்ளார். லோகேஷின் அதிரடி இயக்கம். அனிருத்தின் தெறிக்கும் இசை. சன்பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பு. பேன் இண்டியா மூவி. இது போதாதா 1000 கோடிகளை வசூலில் வாரிக்குவிக்க. படம் வரட்டும் பார்க்கலாம்.