கூலி படத்தில் இணைந்த விஜய் பட நாயகி… இப்படி ஒரு பம்பர் லாட்டரியா? வாழ்க்கதான்!

Coolie: ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் புதிய நாயகியின் அப்டேட் ஒன்று இன்று வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்து இருக்கின்றனர்.
லோகேஷ் கனகராஜ் தன்னுடைய லியோ படத்தினை முடித்த கையோடு ரஜினிகாந்தை இயக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது. ஆனாலும் அந்த இடைப்பட்ட காலத்தில் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தினை முடித்து விட்டே வந்தார்.
லோகேஷ் கனகராஜ் தன்னுடைய எல் சி யூனிவர்ஸ் விஷயங்கள் எதுவும் இல்லாமல் புதிய கதையையே சூப்பர்ஸ்டார் கேட்டதால் அதற்கான வேலைகளில் இருந்தார். அந்த வகையில் கூலி திரைப்படம் கடந்தாண்டு வெற்றிகரமாக தொடங்கியது.
ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னரே சத்யராஜ், நாகர்ஜூனா, ஷாபீன், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் கூலி திரைப்படத்தில் இணைந்து இருப்பதாக அவர்கள் கேரக்டரின் பெயர்களோடு அறிவிப்பு வெளியாகி ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.
தொடர்ச்சியாக ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதற்கிடையில் நாகர்ஜூனா கலந்து கொண்ட ஷூட்டிங் காட்சி இணையத்தில் கசிந்து படக்குழுவுக்கே அதிர்ச்சி கொடுத்தது. அதில் சண்டை காட்சி இருந்ததால் இன்னமும் லோகேஷ் மாறவில்லை என்ற விமர்சனமும் வந்தது.
தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய உழைப்பை இப்படி எளிதாக கெடுத்து விட்டார்களே என வருத்தம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நேற்று மாலை இன்னொரு நடிகை அறிவிப்பு பிப்ரவரி 27 காலை 11 வெளியிடப்படும் என சர்ப்ரைஸ் தகவல் வெளியானது.
பலரும் இது யாராக இருக்குமோ என எதிர்பார்த்த நிலையில் பூஜா ஹெக்டே தான் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஒற்றை பாடலுக்கு நடனம் ஆட அவரை இணைத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த பக்கம் ஜனநாயகனில் விஜய், இங்கு கூலியின் ரஜினிகாந்த். அம்மணிக்கு திடீர் வாழ்க்கை தான் எனவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.