அந்தக் காட்சியை ஏற்றுக் கொள்ளமுடியாது! ‘அமரன்’ திரைப்படத்திற்கு எதிராக CRPF கண்டனம்

by rohini |   ( Updated:2024-11-05 06:29:03  )
amaran
X

amaran

Amaran:தீபாவளி ரிலீஸ் ஆக சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியாகி இன்றுவரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடித்த திரைப்படம் அமரன். இந்தப் படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.


100 கோடிக்கும் மேலாக இந்த படம் வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் சிஆர்பிஎப் அமைப்பிலிருந்து அமரன் திரைப்படத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்த படத்தில் நாடாளுமன்ற தேர்தல் அதிகாரியை கொலை செய்ய நடத்தப்படும் தாக்குதல் காட்சிகளில் எந்தவித எதிர்வினையும் வழங்காமல் சிஆர்பிஎப் வீரர்கள் படுகொலை செய்யப்படுவது மிகவும் இழிவானதாக இருக்கிறது என சி ஆர் பி எப் அமைப்பிலிருந்து ஒரு செய்தி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.


இந்த காட்சிகளால் சிஆர்பிஎப் வீரர்கள் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் ஆவேசமும் அடைந்தனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது .மேலும் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் அவமதிப்பதாகவும் அவர்களின் புகழ்மிக்க பணிகளை மரியாதை இன்றி சிதைக்கின்றதாகவும் இந்த காட்சி உணர்த்துகின்றது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது .


படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் கற்பனைகளோடு உருவாக்கி எங்கள் மீது இழிவு கூறும் ஒரு காட்சியை உருவாக்கி மண்ணின் மைந்தர்கள் நாங்கள் ரத்தத்தை சிந்தி நாட்டை காக்கும் போது அதை கேலியாக படம் பிடிப்பது நியாயமா என்ற ஒரு கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்கள்.


மேலும் நம்முடைய 44 ஆர்ஆர் வீரர்கள் சண்டையிட்டு வீர மரணம் அடைவதை காட்டி அதே நேரத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் எந்த எதிர்ப்பும் இன்றி கொல்லப்படுவதாக காட்டுவது அவர்களின் தியாகத்தை மொத்தமாக கொச்சைப்படுத்துவதாக அந்தக் காட்சி உணர்த்துகின்றது என்றும் அவர்கள் அந்த செய்தி குறிப்பில் பதிவிட்டு இருக்கிறார்கள்.


இந்த படத்தில் பொதுமக்களின் மனதில் சிஆர்பிஎப் வீரர்களின் மதிப்பை சிதைக்கும் வகையில் உள்ளதால் பட குழுவிற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம். எங்கள் வீரர்களின் தியாகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்குமாறும் கேட்டுக் கொள்வதாக அந்த செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story