காதலிச்சி கல்யாணம் பண்ணா காதல் போயிடும்!.. நடன நடிகையிடம் அப்பவே சொன்ன ரஜினி!...
காதல் என்பது எல்லோருக்கும் ஒரு சுகமான அனுபவம்தான். ஆனால், அந்த காதல் எவ்வளவு நாட்கள் நீடிக்கிறது என்பதில்தான் அந்த காதலின் ஆயுள் இருக்கிறது. முன்பெல்லாம் காதலிக்கும் பெண்ணிடம் தங்கள் காதலை பலரும் சொல்ல மாட்டார்கள். ஒருதலைக்காதலாகவே போன காதல் பல உண்டு. அதாவது திருமணத்தில் முடியாத காதல் பலருக்கும் இருக்கிறது.
இருவரும் காதலித்தாலும் அது திருமணத்தில் முடியும் என சொல்ல முடியாது. குடும்ப சூழ்நிலை காரணமாக இருவரும் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்வார்கள். ஆனாலும், அந்த காதல் மனதிற்குள் அப்படியே வாழும். அந்த பெண்ணையோ, ஆணையோ சந்தித்தால் அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
ஒருபக்கம், காதலித்த பெண்ணையோ திருமணம் செய்து கொண்டாலும் பல வருடங்கள் அந்த காதல் நீடிக்கிறதா என்பதுதான் கேள்வி. காதலித்து திருமணம் செய்து கொண்டு சில வருடங்களில் பிரிந்து போனவர்கள் பலரும் இருக்கிறார்கள். காதல் குறையாமல் பல வருடங்கள் சேர்ந்து வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.
சினிமாவில் ஆடிப்பாடி காதலித்து நடிக்கும் நடிகர்கள், காதல் பற்றி பக்கம் பக்கமாக பெருமையாக வசனம் பேசி நடிக்கும் நடிகர்கள் நிஜ வாழ்வில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என சொல்ல முடியாது. இதற்கு பல உதாரணங்கள் சினிமாவில் இருக்கிறது. சரி.. காதல் பற்றி சூப்பர்ஸ்டார் ரஜினி சொன்ன ஒரு விஷயத்தை பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடனமாடியவர் சாந்தி. ஹீரோயின் அருகில் எப்போதும் இவர் ஆடுவார். பல ஊடகங்களும் இவரை பேட்டி எடுத்திருக்கின்றன. சமீபத்தில் அவர் பேட்டி கொடுத்த போது ‘ரஜினி சார் என்னிடம் நீ யாரையாவது காதலித்திருக்கிறாயா?’ என கேட்டார். நான் ‘பண்ணி இருக்கேன் சார்’ என சொன்னேன். ‘கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா?’ என கேட்டார். நான் ‘இல்ல சார்.. பிரிந்துவிட்டோம்’ என சொன்னேன். அதற்கு அவர் ‘சூப்பர்’ என்றார்.
பிரிஞ்சிட்டோம்னு சொல்றோம்.. சூப்பர் அப்படின்னு சொல்றாரே என அவரின் முகத்தை பார்த்தேன். அதற்கு அவர் ‘காதலிக்கறவங்களை கல்யாணம் பண்ணிக்கிறது சந்தோஷம்தான். ஆனால், சில வருடங்களில் அந்த காதல் போய்விடும். இதுவே பிரிந்து, அவர்கள் வேறு யாரோ திருமணம் செய்த பின்னால், எப்போதாவது அவர்களை பார்க்கும் போது அடிவயிற்றில் ஜில்லென ஒன்று ஓடுமே. அது செம ஃபீலிங் இல்ல’ என சொன்னார்.
அதாவது, பிரிந்த காதல் எப்போதும் இறக்காது. சாகும் வரை மனதில் அது வாழும் என சொன்னார்’ உடனே நான் ‘நீங்க யாரையாவது அப்படி காதலிச்சிருக்கீங்களா சார்?’ எனக்கேட்டேன். ஆமாம் என சொன்னவர் அந்த பெண் பற்றி எந்த தகவலும் என்னிடம் சொல்லவில்லை’ என சாந்தி பகிர்ந்துகொண்டார்.