சில்க் அப்பவே அந்த மாதிரியான கேரக்டர்.. பிரபல டான்ஸ் மாஸ்டர் பகிர்ந்த தகவல்

by ROHINI |
silksmitha
X
silksmitha

80கள் காலகட்டத்தில் ஒரு கனவு கன்னியாக தமிழ் சினிமாவையே ஆட்டி படைத்தவர் சில்க் ஸ்மிதா. இவரை தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியது நடிகர் வினுச்சக்கரவர்த்தி. ஒரு மேக்கப் ஆர்டிஸ்டாக வந்த சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவையே ஆட்டி படைக்கும் ஒரு பேரழகியாக கனவு கன்னியாக மாறுவார் என அவருக்கே தெரியாது. அந்த அளவுக்கு அனைவருக்கும் ஒரு பிடித்தமான நடிகையாக வளம் வந்தார். வெறுமனே சோலோ பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி எந்த ஒரு ஹீரோயினுக்கும் கிடைக்காத அங்கீகாரம் அந்தஸ்து இன்று வரை சில்க் ஸ்மிதாவிற்கு கிடைத்திருக்கிறது.

பெரும்பாலும் நடிகர்களை பற்றி தான் காலம் காலமாக பேசுவார்கள் .நடிகைகளை மறந்து விடுவார்கள். ஆனால் சில்க் ஸ்மிதாவை பொருத்தவரைக்கும் அவர் இறந்து இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னும் அவரைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால் தனித்துவமான பெண்மணியாக இருந்திருக்கிறார் என்பதுதான் உண்மை. அவரைப் பற்றி பிரபல நடன இயக்குனர் ஜான் பாபு பல சுவாரசிய தகவல்களை கூறி இருக்கிறார். நாட்டுப்புற பாடல் படத்தில் அமைந்த ஒத்த ரூபா தாரேன் படத்தில் குஷ்புவுடன் நடனம் ஆடியவர் தான் ஜான் பாபு.

அவர் ஆரம்ப காலங்களில் சில்க் ஸ்மிதாவுடன் பல பாடல்களுக்கு ஆடியிருப்பதாக கூறியிருக்கிறார். ஜான் பாபுவும் சில்க் ஸ்மிதாவும் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்திருக்கிறார்கள். சில்க் ஸ்மிதாவை பற்றி ஜான் பாபு கூறும்பொழுது அவர் மிகவும் திமிரானவர் என்றெல்லாம் பத்திரிகைகளில் வந்திருக்கின்றன. ஆனால் சில்க்கை பொருத்தவரைக்கும் தன்னிடம் எப்படி பழகுகிறார்களோ அதை வைத்து தான் சில்க்கும் அவருடைய எக்ஸ்பிரஷனை வெளிப்படுத்துவார். அந்த காலத்தில் ஹீரோயின்களை ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். சோலோ பாடலுக்கு ஆடுபவர்களை ஒரு மாதிரியாக பார்ப்பார்கள்.

இதை சில்க் ஸ்மிதா ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டு இனிமேல் நாம் யாரிடமும் தேவை இல்லாமல் பேசக்கூடாது. நம் வேலை எதுவோ அதை மட்டும் பார்த்துவிட்டு இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததாக ஜான் பாபு கூறினார் .அதனால் தான் யார் வந்து பேசினாலும் அவர்கள் கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு அமைதியாக இருந்து விடுவார் சில்க் .அதைப்போல தன்னிடம் பேச வருபவர்கள் எந்த கண்ணோட்டத்தில் பேசுகிறார்கள் என்பதையும் நன்கு தெரிந்து கொள்வார் சில்க் ஸ்மிதா. ஒரு டெக்னீசியன் ஆகட்டும் நடன இயக்குனராகட்டும் கூட ஆடும் நடிகராக இருக்கட்டும் அவர்கள் டான்ஸ் பற்றியோ படத்தைப் பற்றியோ பேசினால் சில்க் பேசுவார்.

அதை விட்டு நீங்க இன்னைக்கு அழகா இருக்கீங்க என்று படத்தை தவிர வேறு ஏதாவது பேசினால் போடா என சொல்லிவிட்டு சென்றுவிடுவார் ஸ்மிதா. அதைப்போல அவருடைய காஸ்ட்யூம் டிசைன் பண்ணுவதற்கு தனியாக காஸ்ட்யூம் டிசைனர் வைத்துக் கொண்டதே இல்லை. அவரே தான் என்ன பாடல் என்ன மாதிரியான சூழல் அந்த படத்தில் நடிகை என்ன மாதிரியான உடை அணிகிறார் என்றெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப அவரே அவருடைய உடையை செலக்ட் செய்து கொள்வார்.

john babu

எல்லாம் ரெடியாகி மேலே ஒரு கவுன் போட்டு வெளியே வரும்பொழுது சில்க் கொஞ்சம் உங்களுடைய டிரெஸ்ஸை காட்டுங்கள் என சொன்னால் உடனே அந்த கவனை கழட்டி பார்த்துக்கோங்க என தாராளமாக காட்டுவார் சில்க் .இதைப் பற்றி அவர் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார் .ஏனெனில் படத்திற்கு இது முக்கியம். ட்ரெஸ்ஸிங் ரொம்ப முக்கியம். அதனால் அதை பார்க்க வேண்டும் என சொன்னால் உடனே திறந்து காட்டிவிடுவார் சில்க். அவர் பார்வையில் எதுவுமே தவறு கிடையாது. பார்ப்பவர்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் அவர்களையும் சும்மா விடமாட்டார் என ஜான் பாபு ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Next Story