அவர குறைச்சு எடை போடாதீங்க.. மனுஷன் அஜித் மாதிரி!.. ஓவரா புகழ்றாரே கல்யாண் மாஸ்டர்!..
விடாமுயற்சி: அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நிச்சயம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாகும் என்கின்ற நம்பிக்கையில் இருந்து வருகிறார்கள். கடந்த 2 வருடங்களாக விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட் கேட்டு சலித்துப்போன ரசிகர்களுக்கு விடாமுயற்சி படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கில் சற்று நிம்மதியை கொடுத்திருக்கின்றது.
அதிலும் 'சவதீகா' பாடலுக்கு நடிகர் அஜித் நடனமாடி இருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கின்றது. கடந்த இரண்டு வருட காத்திருப்புக்கு நிச்சயம் இந்த வருட பொங்கலுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று லைக்கா நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றது, அந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும் உருவாகி இருக்கின்றது. படம் பொங்கலுக்கு ரிலீசாகின்றது என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
இந்நிலையில் இப்படத்தில் பாடலுக்கு நடனம் அமைத்த கல்யாண் மாஸ்டர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'துணிவு திரைப்படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. விடாமுயற்சி திரைப்படத்தின் மீது அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள். அதிலும் அஜித் சார் குத்தாட்டம் போடுவதை தான் ரசிகர்கள் அதிகமாக விரும்புவார்கள்.
ஆனால் விடாமுயற்சி படத்தில் இடம்பெற்றிருக்கும் சவதீகா பாடல் கிளாசிக்கான பாட்டு. டான்ஸ் ஸ்டெப் எல்லாமே கொஞ்சம் ஸ்லோவாக இருக்கும். இதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்கின்ற தயக்கம் எனக்கு இருந்தது. ஆனால் பாடல் வெளியான பிறகு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இப்பாடலை தாய்லாந்தில் 4 நாட்கள் சூட் பண்ணினோம்.
மகிழ் திருமேனி என் மீது முழு நம்பிக்கையை வைத்து நீங்கள் கலக்கிடுவீங்க கல்யாண் என்று கூறினார். அதேபோல டான்ஸ் ஸ்டெப்பும் கிளாஸாக அமைந்திருந்தது. பாடலில் இடம்பெற்றுள்ள டான்ஸ் மூவ்மெண்ட் அனைத்துமே அஜித் சாருக்கும் ரொம்பவே பிடிச்சிருந்தது. இந்த பாடலை நாங்கள் எடுக்கும் போது அஜித் சாருக்கு கிட்டத்தட்ட 102 டிகிரி காய்ச்சல் இரும்பி கொண்டே இருந்தார்.
நாங்கள் அவரிடம் ரெஸ்ட் எடுக்க கூறினோம். ஆனால் டெக்னீசியன்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்தது வீணாகி விடக்கூடாது என்று கூறிவிட்டு அரை மணி நேரத்தில் வருகிறேன் என்று சென்றார். போய் ஒரு ஆன்டிபயாட்டிக் மாத்திரையை போட்டுக் கொண்டு மீண்டும் வந்து காய்ச்சலோடு அந்த பாட்டுக்கு நடனம் ஆடினார். மகிழ்திருமேனியை குறைத்து எடை போடாதீர்கள். அவர் ஒரு திறமையான இயக்குனர்.
அஜித் மாதிரியே அவரும் அதிகம் பேச மாட்டார். ஆனால் அவர்களின் செயல்கள் அதிகமாக பேசும். அவரின் முதல் திரைப்படமான தடையறத் தாக்க படத்திலிருந்து அவரிடம் நான் வொர்க் பண்ணி இருக்கிறேன். மிகக் கடினமான உழைப்பாளி. அஜித்தை பற்றி சொல்லவே வேண்டாம். இரண்டு பேரும் சேர்ந்தா எப்படி இருக்கும் அப்படி ஒரு விஷயம் விடாமுயற்சி படத்தில் நிச்சயம் இருக்கும். அதை படம் பார்க்கும்போது நீங்கள் பார்ப்பீர்கள்' என்று பேசியிருக்கின்றார் கல்யாண் மாஸ்டர்.