சிம்புக்கு நிறைய பேரு துரோகம் பண்ணாங்க!.. ஆனா அவர்.. சாண்டி மாஸ்டர் ஃபீலிங்!..

சின்ன வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு. 10 வயதிலிருந்தே சினிமாவில் இருப்பதால் கதை, திரைக்கதை, இயக்கம், இசை, எடிட்டிங் என எல்லா துறைகளிலும் சிம்புவுக்கு நல்ல அனுபவம் உண்டு. பல வருடங்களாக சினிமாவில் இருப்பதால் சினிமா துறையில் பல அனுபவங்களை பார்த்தவர் இவர், ஆனாலும் இவர் மீது நிறைய புகார்களும் உண்டு.
படப்பிடிப்புக்கு சரியாக போக மாட்டார், சில நாட்கள் நடித்த பின் தயாரிப்பாளரிடம் பேசிய சம்பளத்தைவிட அதிகமாக கேட்பது என குடைச்சல் கொடுப்பார் என பல தயாரிப்பாளர்கள் இவர் மீது புகார் சொன்னதுண்டு. வெற்றிமாறன் இயக்கத்தில் இப்போது நடித்துவரும் புதிய படம் கூட இந்த பிரச்சனையை சந்தித்தது.

சிம்புவுக்கென நிறைய ரசிகர்கள் இருந்தாலும் மற்ற நடிகர்களை போல சிம்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில்லை. ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்கும் இடையே நிறைய இடைவெளி விடுகிறார். அவரின் பத்து தல படம் வெளியாகி 2 வருடங்கள் கழித்து தக் லைப் வெளியானது. இயக்குனர்களிடம் கதை கேட்டு படங்களை கமிட் செய்தாலும் அவை டேக் ஆப் ஆவதில்லை. அடுத்த படத்தை பார்க்கிங் பட இயக்குனர் இயக்குவதாக இருந்து அது டிராப் ஆகி வெற்றிமாறன் படத்தில் நடித்தார். அதுவும் இப்போது என்னவானது தெரியவில்லை.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் ‘காதல் அழிவதில்லை படத்திற்கு பின் சிம்பு நிறைய ஸ்டார் நைட் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்ப இருந்தே அவரோடு எனக்கு நல்ல நெருக்கம் உண்டு. நான் பெரிய ஆளா ஆகணும்னு அவர் மனதார ஆசைப்பட்டார். அவர் எப்போதும் யாருக்கும் துரோகம் செய்யணும்னு நினைக்க மாட்டார். ஆனா அவர் கூட இருந்த நிறைய பேர் அவருக்கு துரோகம் பண்ணாங்க. ஆனாலும் துரோகம் பண்ண பலருக்குமே அவர் மீண்டும் வாய்ப்பு கொடுத்தார்’ என சொல்லியிருக்கிறார்.