Kalki: ‘கல்கி’ படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட தீபிகா படுகோனே! பின்ன கேட்டது கொஞ்ச நஞ்சமா?
அதிரடியாக நீக்கப்பட்ட தீபிகா:
‘கல்கி 2898 AD’ இரண்டாம் பாகத்திலிருந்து தீபிகா படுகோனே நீக்கப்பட்டதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அவருக்கு முக்கியத்துவம் என்பது குறைவாக இருந்ததாக தீபிகா கருதியிருக்கிறார். அதனால் முழு ஈடுபாட்டுடன் நடிக்க முடியாது என்று கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்குள் தீபிகா படுகோனே இந்தப் படத்தில் இருந்து விலகுவதால் கதையில் சில மாற்றங்கள் நிகழலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது தீபிகாவுக்கு பதிலாக வெறோரு நடிகையையும் நடிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
தீபிகாவின் கோரிக்கை:
இந்தப் படத்திற்காக தீபிகா அதிக சம்பளம் கேட்டதாகவும் தெரிகிறது. ஏற்கனவே முதல் பாகத்தில் வாங்கிய சம்பளத்தை விட 25 சதவீதம் அதிக சம்பளம் கேட்டதாகவும் தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு நாளைக்கு 7 மணி நேரம்தான் நடித்துக் கொடுப்பாராம். இப்படி இருக்கும் நிலையில் கிராஃபிக்ஸ் பின்னணியில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படத்திற்கு இவருடைய இந்த குறைவான கால்ஷீட் இன்னும் படத்தின் பட்ஜெட்டை அதிகப்படுத்தும் என கருதியிருக்கிறார்கள்.
அதோடு தன்னுடைய குழுவையும் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்க வைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவருடைய குழுவில் மொத்தம் 25 பேர் இருக்கிறார்களாம். அத்தனை பேருக்கும் ஐந்து நட்சத்திர விடுதி என்றால் பட்ஜெட் நினைத்ததை விட அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் பிரபாஸ் இதுவரை அவருடைய சம்பளத்தை உயர்த்தி கேட்கவே இல்லையாம்.
தீபிகா மீது அதிருப்தி:
இந்த கோரிக்கைகளால் தயாரிப்பு தரப்பில் தீபிகா மீது பெரும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது போன்ற செல்லாத கோரிக்கைகளுக்காக தீபிகா செய்திகளில் இடம் பெறுவது இது முதல் முறையல்லை. தீபிகாவின் தொழில்முறை திறமையின்மையைக் கண்டு இயக்குனர் சந்தீப் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.
படத்தின் சிறப்பு:
- புராணம் கலந்த சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம். மகாபாரதம் கதையை இணைத்து கூறிய விதம்
- அசுவத்தாமா என்ற கேரக்டரில் அமிதாப் பச்சனின் நடிப்பு மிகச்சிறப்பு
- முதன்மை வில்லனாக கமல்ஹாசனின் அதிரடியான நடிப்பு
- மிகப்பெரிய பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 600 கோடிக்கும் மேல்
- ஹாலிவுட் பாணியில் த்ரில்லிங்கான சவுண்ட்
