devara
Devara 2: பேன் இந்தியா திரைப்படமாக வெளிவந்த தேவரா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வரும் நிலையில் புது எண்ட்ரி ஆக தமிழ் பிரபலம் ஒருவரை இயக்குனர் இணைக்க இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.
சமீப காலங்களாகவே பேன் இந்தியா திரைப்படங்கள் தொடர்ந்து தயாராகி வருகிறது. ஒரு மொழி ரசிகர்களை மட்டும் தவறாமல் பல மொழி ரசிகர்களிடம் ஒரு படத்தை எடுத்துச் சென்று அதை சூப்பர் ஹிட் ஆக்குவது தற்போது சினிமாவின் ட்ரெண்ட்ஸ் செட்டிங் விஷயங்களில் ஒன்றாகவும் மாறியிருக்கிறது.
அந்த வகையில் தெலுங்கு சினிமா இதை தொடர்ந்து செய்து வருகிறது. பாகுபலி தொடங்கி பல திரைப்படங்கள் பேன் இந்திய திரைப்படங்களாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதே வரிசையில் கடந்த ஆண்டு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் தேவாரா திரைப்படம் வெளியிடப்பட்டது.
இருந்தும் மற்ற பேன் இந்திய படங்களுக்கு கிடைத்த வரவேற்பை தேவராவால் பெற முடியவில்லை. சரியான கிளைமேக்ஸும் படத்திற்கு பலம் சேர்க்காமல் எதிர்பார்ப்பை தவறவிட்டது. இதனால் தேவரா இரண்டாம் பாகத்துக்கு வலு சேர்க்க படத்தின் ஸ்கிரிப்ட்டில் மாற்றம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நிறைய மாற்றங்கள் செய்வது மட்டுமல்லாமல் ஒரு புது கேரக்டரையும் உள்ளே சேர்த்து இருப்பதாக கூறப்படுகிறது. அந்த கேரக்டரில் பிரபல தமிழ் சினிமா நடிகர் சிலம்பரசனை களமிறக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஜூனியர் என்டிஆர் மற்றும் சிம்பு இடையே வலுவான காட்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
இதுமட்டுமல்லாமல் முதல் பாகத்தில் ஜான்வி கபூர் நடித்து இருந்தார். இந்த பாகத்தில் அவருடன் இன்னொரு நாயகியை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
SAC: சினிமாவிலும்…
Kaithi 2:…
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…