என்ன பத்தி மட்டும் கேளுங்க! சிம்ரன் பற்றிய கேள்வியை அவாய்டு பண்ண தேவயாணி..

by ROHINI |
simran
X

simran

Devayani: தமிழ் சினிமாவில் 90கள் காலகட்டத்தில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தேவயானி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் நிழற்குடை. இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே இருக்கும் அந்த புரிதல் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி விளக்கும் ஒரு கதையாக இந்த படம் அமைந்திருக்கிறது. இனிமேல் என்னை படங்களில் தாராளமாக பார்க்கலாம்.

நல்ல கதைகள் வந்தால் கண்டிப்பாக நான் இனிமேல் நடிப்பேன் என தேவயானி கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவில் தொட்டாசிணுங்கி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான தேவயானி காதல் கோட்டை திரைப்படத்திற்கு பிறகு மிகப்பெரிய உச்சத்தை அடைந்தார். கிளாமரே காட்டாமல் நடிப்பாலும் தன்னுடைய அழகாலும் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக இந்த சினிமாவில் கோலோச்சியவர் தேவயானி.

விஜய் அஜித் கார்த்திக் பார்த்திபன் என அனைத்து நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார். சூரியவம்சம் திரைப்படம் இவருக்கு ஒரு மிகப்பெரிய அந்தஸ்தை கொடுத்தது. இந்த நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் பத்திரிக்கையாளர் ஒருவர் சிம்ரன் பற்றிய ஒரு கேள்வியை தேவையானிடம் கேட்டார். அதாவது ஒரு விழா மேடையில் சிம்ரன் டப்பா ரோலில் நடிக்கும் நடிகை என்பதை போன்று கூறியிருந்தார். அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்டபோது என்ன பத்தி மட்டும் கேளுங்க.

நான் பதில் சொல்கிறேன். என்னைப் பற்றியான கேள்வியாக இருந்தால் மட்டுமே தான் நான் பதில் கூறுவேன் என அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் கடந்துவிட்டார் தேவயானி. சிம்ரன் கூறிய அந்த கருத்து கோடம்பாக்கத்தில் ஒரு பெரும் புரளியை கிளப்பியது. யார் அந்த நடிகை ?சிம்ரன் எந்த நடிகையை இப்படி கடுமையாக விமர்சித்தார்? ஒருவேளை ஜோதிகாவா இருக்குமோ என்றெல்லாம் கேட்டு வந்தனர். ஆனால் அந்த கேள்வியை பற்றியே கேட்கக்கூடாது. தன்னைப் பற்றி மட்டுமே கேளுங்கள் என தேவயானி சிம்ரன் பற்றிய தேவியை தவிர்த்து விட்டார்.

ஆனால் சிம்ரன் தேவயானி இவர்களை பொறுத்த வரைக்கும் ஹீரோயின் ஆகத்தான் நடிக்க வேண்டும் என்ற கருத்தில் முற்றிலும் முரண்பாடு உள்ளவர்கள். இருவருமே கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் அமைந்தால் நடிக்கலாம் .அதற்காக ஹீரோயின் ஆகத்தான் நடிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி வருவது தவறான ஒரு விஷயம் என்று தான் இருவருமே பேசி வருகிறார்கள். இதே போல் தான் ஒரு சமயம் தேவயானி சொன்ன கருத்தை வைத்து ரம்பாவை தாக்கிய தேவயானி என பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.

Next Story