எல்லாமே தமிழ்நாடுதான்! ஜோதிகா பற்றிய கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்த தேவயாணி

jyothika
Devayani:இன்று தேவயானி நடிப்பில் நிழற்குடை திரைப்படம் வெளியாகி இருக்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த தேவயானியை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு பல கேள்விகளை கேட்டனர். நிழற்குடை திரைப்படம் என்பது பெற்றோர் கவனிப்பில் பிள்ளைகள் கண்டிப்பாக வளர்க்கப்பட வேண்டும். இப்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் செல்போன் டிவி என அவர்களுக்கு என ஒரு தனி உலகை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு உறவு என்றால் என்ன? உறவுகளுக்கு இடையே இருக்கும் பீலிங்ஸ் அனைத்தையும் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தர வேண்டும்.
நாம் அவர்களை கண்ணும் கருத்துமாக பார்த்தால்தான் பிற்காலத்தில் நம்மையும் அவர்கள் கண்டிப்பாக பார்ப்பார்கள். இப்போது முதியோர் இல்லம் பெருமளவு வந்துவிட்டது. அதை குறைக்க வேண்டும் என்பதை தான் இந்த படம் நமக்கு சொல்லித் தரும் என கூறியிருக்கிறார் தேவயானி. ஏன் படங்களிலேயே நீங்கள் நடிக்கவே இல்லை என்ற ஒரு கேள்வி அவரிடம் கேட்டபோது கண்டிப்பாக நடிப்பேன் சார். இனிமேல் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் அமையும் போது நல்ல நல்ல கதாபாத்திரம் வரும் பொழுது கண்டிப்பாக இனிமேல் நடிப்பேன் என கூறி இருக்கிறார்.
அது மட்டுமல்ல குழந்தைகளை கவனிக்கும் முறை பற்றி சொல்லுங்கள் எனக் கேட்டபோது தன்னுடைய குழந்தைகளை பள்ளியில் தானே காரை ஓட்டிச் சென்று தான் அவர்களை விடுவேன். யாரை நம்பியும் நானும் என் கணவரும் என் குழந்தைகளை விட்டது கிடையாது. இப்போது சமையல் கூட நானே தான் சமைக்கிறேன். நான் இல்லாத போது வீட்டில் சமைத்துக் கொள்வார்கள். உதவிக்கு என ஆள் தனியாக வைக்கவில்லை. இப்படி என்னுடைய குழந்தைகளை நானும் என் கணவரும் தான் இப்போது வரை பார்த்து வருகிறோம் என கூறினார்.
இந்த நிலையில் ஜோதிகா பற்றிய ஒரு கேள்வியும் தேவையானிடம் கேட்கப்பட்டது. அதாவது தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நிறைய கதாநாயகிகள் வேற மாநிலங்களில் சென்று தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி கதைகள் பண்ணுவதில்லை. எந்த இயக்குனர்களும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்கள். இதை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள் என்ற ஒரு கேள்வி கேட்க அதற்கு தேவையான மற்ற மொழி என்றால் எதை சொல்கிறீர்கள் என திருப்பி கேட்டார்.
அதற்கு அந்த பத்திரிக்கையாளர் உதாரணமாக ஜோதிகா இப்போது இந்த மாதிரி ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என கேட்க நான் அப்படி போகவே இல்லை. எல்லாமே எனக்கு தமிழ்நாடு தான் கொடுத்திருக்கிறது. ரொம்ப நல்ல படங்கள் ரொம்ப திருப்தியோடு இருக்கிறேன். இன்னமும் நடித்துக் கொண்டிருக்கிறேன். யாராவது என்னை வந்து கேட்டாலும் அந்த கதையை கேட்டுவிட்டு நன்றாக இருந்தால் தான் அதில் நான் நடிப்பேன். ஆனால் எப்பொழுதுமே தமிழில் தான் நான் மிகவும் பிசியாக இருந்திருக்கிறேன். மற்ற மொழிகளில் எனக்கு நல்ல நல்ல படங்கள் வந்திருந்தாலும் தமிழ் மொழியில் டேட்ஸ் இருக்கிறதா ஏதாவது நாம் கால் சீட்டு கொடுத்திருக்கிறோமா என பார்த்துவிட்டு தான் அதற்கு ஏற்ப நான் மற்ற மொழிகளில் நடித்து கொடுத்திருக்கிறேன். ஆனால் என்னுடைய முதல் முன்னுரிமை எப்பொழுதுமே தமிழ் சினிமாவிற்கு மட்டும்தான் என தேவயாணி கூறினார்.