சந்தானம் எத்தன படத்துக்கு வந்திருக்காரு? யோகிபாபுவை மட்டும் டார்கெட் பண்ண காரணம்

by ROHINI |
yogibabu
X

yogibabu

Yogibabu: தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் தன்னுடைய நகைச்சுவையால் மக்களை சிரிக்க வைத்திருக்கின்றனர். சினிமாவில் ஒரு முக்கிய அங்கமாகவே பார்க்கப்படுவது நகைச்சுவைதான். ஆனால் சமீபகாலமாக அந்த நகைச்சுவை படங்களில் குறைந்து கொண்டேதான் வருகின்றது. நாகேஷ் முதல் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் வரை இவர்கள் காலத்தில் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது.

இவர்களுக்கு பிறகு வந்த சந்தானம், சூரி போன்றோர் அதை கொஞ்சமாவது காப்பாற்றி வந்தார்கள். ஆனால் இப்போது சூரியும் சந்தானமும் ஹீரோவாக நடிக்க போய்விட்டதால் நகைச்சுவைக்கு வெற்றிடம் வந்தது உண்மைதான். இதில் யோகிபாபு இந்த நகைச்சுவைக்குள் வந்தாலும் அவருடைய காமெடி அந்தளவு எடுபடவில்லை. ஆனாலும் சின்ன படங்கள் முதல் பெரிய படங்கள் வரை யோகிபாபு நடித்து வருகிறார்.

அதனால்தான் என்னவோ அவரால் அவர் நடித்த படங்களுக்கு ப்ரோமோஷனுக்கு வரமுடியவில்லை. இதை பற்றி பெரிய பிரச்னையே சமீபத்தில் எழுந்தது. ஒரு தயாரிப்பாளர் ‘ப்ரோமோஷனுக்கு வந்தால் 7 லட்சம் கேட்கிறார் யோகிபாபு’ என சொல்லி வருத்தப்பட்டார். அதற்கு யோகிபாபுவும் பதில் பேசியிருந்தார். இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறும் போது ஏன் யோகிபாபுவை மட்டும் டார்கெட் பண்றாங்க என கேட்டிருக்கிறார்.

யோகிபாபுவை பொறுத்தவரைக்கு ஹீரோவாக நடித்த படம் என்றால் கண்டிப்பாக ப்ரோமோஷனுக்கு வருவார். ஒரு கேமியோ ரோல், சப்போர்ட்டிங் ரோல் என்றால் எப்படி வரமுடியும்? அப்படியே பார்த்தாலும் கவுண்டமணி நடித்த படங்கள் எத்தனை? ஆனால் எந்த படத்திற்கு ப்ரோமோஷனுக்கு வந்திருக்கிறார்? வடிவேலுவும் எத்தனை பட ப்ரோமோஷனுக்கு வந்திருக்கிறார்.

yogibabu

வடிவேலு வந்திருப்பார். ஒரு வேளை ஹீரோவாக நடித்த படம் என்றால் வந்திருக்கிறார். சந்தானம், சூரி எல்லாருமேதான் சொல்கிறேன். அப்படி இருக்கும் போது யோகிபாபுவை மட்டும் டார்கெட் பண்ணா எப்படி என தனஞ்செயன் கூறியிருக்கிறார்.

Next Story