டைவர்ஸ் ஆனாலும் நாங்க அப்படித்தான்.. தனுஷ் ஐஸ்வர்யா மேட்டரில் என்னதான் நடக்குது?

dhanush
சமீபத்தில் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் தனுஷ் பேசியது தான் பெரிய அளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. இதற்கு முன்பு வரை அவர் இந்த மாதிரி ஆவேசமாக பேசியதே கிடையாது. ஒரு செங்கல்லை கூட பிடுங்க முடியாது என கூறியிருந்தார் தனுஷ். அதற்கு சமீபகாலமாக அவர் மீது எறியப்பட்ட கற்கள். என்ன பிரச்சனை நடந்தாலும் அதில் எப்படியாவது தனுஷை உள்ளே இழுத்து போட்டு விடுகிறார்கள். பாடகி சுசித்ரா கூட சமீபத்தில் தனுஷ் பற்றி கூறினார்.
ஜெயம் ரவி ஆர்த்தி இவர்கள் விவகாரத்திலும் தனுஷின் பேச்சு தான் அடிபட்டது. இப்படி எல்லா விஷயத்திலும் தனுஷ் பெயரையே உச்சரிப்பது ஒரு கட்டத்தில் அவருக்கே கடுப்பாகிவிட்டது. சில பிரபலங்களை பொருத்தவரைக்கும் எந்த விமர்சனம் வந்தாலும் அதை கண்டுக்காமல் போவது தான் நல்லது என கூறுவார்கள். அப்படித்தான் தனுஷும் இருந்தார். ஆனால் எப்படியாவது ஒரு வகையில் ஒரு வீடியோ அவர் கண்ணில் பட்டுவிடாமலா போய்விடும். அப்படி வந்ததுதான் இந்த மாதிரி சில சர்ச்சைகள். இதையெல்லாம் மனதில் வைத்து குபேரா இசை வெளியீட்டு விழாவில் பொங்கி எழுந்து விட்டார் தனுஷ்.
ஆரம்பத்தில் அப்படி இப்படி இருந்தவர் தான். ஆனால் இப்பொழுது மிகவும் பக்குவப்பட்ட மனிதராக எல்லா விஷயங்களையும் துறந்த ஒரு மனிதராக மாறிவிட்டார் தனுஷ். அப்படி இருக்கும் பொழுது மீண்டும் அவரைப் பற்றி பேசுவது கோபம் வராமல் இருக்குமா? முன்பு இருந்த தனுஷ் மாதிரியே இப்போதும் இருந்திருந்தால் யார் வேண்டுமானாலும் அவர் சட்டையை பிடித்து கேட்கலாம் .ஆனால் இப்போது இருக்கும் தனுஷே வேற .இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சில தினங்களுக்கு முன் அவருடைய மகன் பட்டமளிப்பு விழாவில் அவரும் அவருடைய முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவும் ஒன்று சேர்ந்து வந்தது அனைவருக்குமே ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சமீபத்தில் தான் இருவருக்கும் விவாகரத்து கொடுத்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் மகன் பட்டமளிப்பு விழாவில் இருவருமே ஒன்றாக அதுவும் அருகில் நின்றவாறு தன்னுடைய மகன் பட்டம் வாங்குவதை சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்தனர். அதை பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருந்தது .இதைப்பற்றி வலைப்பேச்சு அந்தணன் கூறும் பொழுது இருவருக்கும் விவாகரத்து மட்டும்தான் நடந்திருக்கிறது. ஆனால் இருவரும் ஒன்றாக வாங்கிய சொத்துக்கள் அப்படியே தான் இருக்கின்றன. அது பிரிக்கப்படவில்லை. இருவருமே ஈமெயில் மூலம் அவ்வப்போது பேசிக் கொள்கிறார்கள்.
என்ன விஷயமாக இருந்தாலும் அதை இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள். மகன் என்று வரும் பொழுது பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து அவர்கள் கடமையை செய்து வருகின்றனர் .அப்படி இருக்கும் பொழுது ஏன் இந்த விவாகரத்து என்ற கேள்வி வரும் .அதற்கு ஒரே காரணம் திருமண பந்தத்தில் இருக்கும் பொழுது ஒருத்தருக்கு கட்டுப்பட்டு இன்னொருத்தர் இருக்கத்தான் வேண்டி வரும்.

dhanush
இருவரும் ஒரே துறை என்பதால் சில நேரங்களில் வீட்டுக்கு இரவு நேரத்தில் தாமதமாக வருவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. ஏன் இவ்வளவு லேட் என்று கேட்கத்தான் வேண்டி வரும். அதெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த டைவர்ஸ் என்ற ஒரு விஷயம். மற்றபடி இருவரும் பேசிக் கொள்வது ஒன்றாக மீட் பண்ணுவது இதெல்லாம் நடக்கத்தான் செய்கிறது என அந்தணன் கூறினார்.