தனுஷ் எஸ்கேவை காப்பாத்தல… காலியாக இருந்த சுள்ளானை காப்பாற்றியதே அவர் தானாம்!

by Akhilan |
Sk Dhanush
X

Sivakarthikeyan: தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் இன்னமும் ஒரு பனிப்போர் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதுகுறித்து தற்போது ஒரு முக்கிய தகவலும் இணையத்தில் கசிந்து இருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் வெற்றியாளராக வந்தவர் சிவகார்த்திகேயன். அதைத்தொடர்ந்து அந்த தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளராகவும் இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் அவரை தன்னுடைய மூன்று திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க வைத்தார்.

அப்பொழுது சிவகார்த்திகேயன் நடிப்பை பார்த்து அசந்த தனுஷ் உன்னை காமெடியை ஆக்கி தப்பு செய்துவிட்டதாக கூறி அவரை வைத்து தன்னுடைய வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் எதிர்நீச்சல் திரைப்படத்தை தயாரித்தார்.

சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் அப்படம் மிகப்பெரிய அளவில் ஏற்றத்தை கொடுத்தது. இதைத்தொடர்ந்து இன்று சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக மாறியிருக்கிறார். ஆனால் முதல்முறையாக ரெமோ திரைப்படம் இடையில் தன்னை சிலர் வளர விடாமல் செய்வதாக கண்கலங்கினார்.

தொடர்ந்து வளர்த்து விட்டேன். வளர்த்து விட்டேன் என சிலர் சொல்லிக் கொண்டே இருப்பதாகவும் மறைமுகமாக தனுஷை சாடினார். இதனால் ஏற்றிவிட்ட ஏணியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் வெறுப்பேற்றி வருவதாக பலரும் விமர்சனம் செய்தனர்.

ஆனால் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஒரு கட்டத்தில் சீடன், மயக்கம் என்ன, நையாண்டி உள்ளிட்ட திரைப்படங்களில் தோல்வியை தழுவி வந்தார் நடிகர் தனுஷ். அந்த நேரத்தில் அவர் வேலையில்லா பட்டதாரி படத்தை நடித்து தயாரித்தார்.

அதேவேளையில் நடிகர் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் திரைப்படத்தையும் தயாரித்திருந்தார். விஐபி விநியோஸ்த வேலை நடக்கும் போது இரண்டு படத்தையும் சேர்த்து வாங்கவே விரும்பினார்களாம். தொடர்ந்து, 30 கோடிக்கு படத்தையும், சேட்டிலைட் உரிமையையும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் வாங்கினார்களாம்.

அதை தொடர்ந்தே நடிகர் தனுஷின் திரை வாழ்க்கையும் மாறியதாம். சரியான திறமையுள்ள நடிகர் கிடைத்ததால் அவரை நீங்க அந்த இடத்தில் தூக்கி விட்டீர்கள் அவ்வளவுதான். மற்றபடி உங்களால் எஸ்கே வாழ்க்கை மாறவில்லை எனவும் கிசுகிசுத்து வருகின்றனர்.

Next Story