எங்க கூடவே வம்புக்கு வந்தா எப்படிப்பா?.. விடாமுயற்சியால் திடீரென பிளானை மாத்திய தனுஷ்..

by Ramya |
dhanush
X

விடாமுயற்சி: நடிகர் அஜித் நடிப்பில் மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி இப்படத்தை எடுத்து முடித்து இருக்கிறார்கள். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீரென்று தவிர்க்க முடியாத காரணங்களால் படம் வெளியாகவில்லை என்ற அறிவிப்பை லைக்கா நிறுவனம் வெளியிட்டது. இது அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதாவது விடாமுயற்சி திரைப்படம் பிரேக் டவுன் என்கின்ற ஆங்கில திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இந்த ரீமேக் உரிமையை லைக்கா நிறுவனம் சரியாக வாங்காமல் படத்தை எடுத்து இருக்கிறார்கள்.


இதனால் பிரேக் டவுன் படத்தை தயாரித்த பாராமென்ட் நிறுவனம் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள். இந்த பிரச்சினை காரணமாக விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாமல் இருந்து வந்தது. இதற்கு இடையில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெளியிட்டு தேதியைக் கூட படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்கள்.

அதன்படி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 10ம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் விடாமுயற்சி திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என்று கேள்வி எழுப்ப தொடங்கி விட்டார்கள். இதனால் படக்குழுவினர் நேற்று விடாமுயற்சி திரைப்படத்தின் டிரைலருடன் சேர்த்து படம் வெளியிட்டு தேதியை அறிவித்திருக்கிறார்கள். அதன்படி விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது.

தனுஷின் NEEK விலகல்: நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்தை தொடர்ந்து நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை தானே இயக்கி தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க இளம் நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலமாக தனது அக்கா மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்துகின்றார் நடிகர் தனுஷ். இந்த திரைப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது.

இந்த திரைப்படம் ஒரு காதல் சப்ஜெக்ட் என்பதால் பிப்ரவரி மாதம் 7ம் தேதி படத்தை வெளியிடுவதற்கு முடிவு செய்து இருந்தார்கள். ஆனால் தற்போது விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி 6ம் தேதி வெளியாக இருப்பதால் தனுஷ் தனது படத்தின் தேதியை மாற்றுவதற்கு முடிவு செய்து இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் செய்திகள் பரவி வருகின்றன.


அதன்படி நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் திரைப்படத்தை வருகிற ஜனவரி 30 ஆம் தேதி வெளியிடுவதற்கு தனுஷ் முடிவு செய்து இருக்கின்றாராம். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே தனுஷின் இட்லி கடை திரைப்படத்துடன் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் மோதுகின்றது.

இந்த இரண்டு திரைப்படங்களும் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது விடாமுயற்சி திரைப்படமும் தனுஷின் NEEK திரைப்படத்துடன் வெளியாக இருப்பதால் தற்போது வெளியீடு தேதியை மாற்ற முடிவு செய்திருக்கின்றாராம் தனுஷ்.

Next Story