Dhanush: இட்லி கடை படத்துக்கு தனுஷ் வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா? ரொம்ப தைரியம்தான்!
Dhanush: இட்லி கடை படத்துக்கு தனுஷ் நடிக்க வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் கசிந்து இருக்கிறது.
தமிழ் சினிமாவில் நடிகராக தன்னுடைய இடத்தை தொடர்ந்து தக்க வைத்து கொள்வது தனுஷ் மட்டும்தான். அவர் நடிப்பில் வித்தியாசமான படங்கள் வெளியாகி சூப்பர்ஹிட் வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து கோலிவுட்டை தாண்டி பல மொழிகளுக்கு சென்றார்.
இந்தியில் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் நடித்து ஆச்சரியப்படுத்தினார். நடிப்பு மட்டுமல்லாமல் பா.பாண்டி படத்தினை இயக்கவும் செய்தார். ராஜ்கிரண், ரேவதி நடிப்பில் அப்படம் நல்ல வெற்றியை பெற்றாலும் அதன்பின் தன் இயக்கத்துக்கு பிரேக் கொடுத்தார்.
சில ஆண்டுகள் கழித்து ராயன் படம் மூலம் மீண்டும் இயக்குனராக அடி வைத்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் படத்துக்கு சூப்பர் வரவேற்பு கிடைத்தது. அதிலும் ஆக்ஷன் காட்சிகளும் தனுஷின் டைரக்ஷன் அப்ளாஸ் வாங்கி இருந்தது.
கடந்தாண்டே தன்னுடைய மகனை ஹீரோவாக அறிமுகம் செய்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தினை இயக்கினார். ஆனால் அது ராயன் அளவுக்கு நல்ல வரவேற்பை பெறவில்லை என்பதால் சுமார் வெற்றியை மட்டுமே பெற்றது.
இதை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் அடுத்த படமாக இட்லி கடை உருவாகி வருகிறது. இப்படத்தில் அவரே நடித்தும் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய் உள்ளிட்டோர் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்தாண்டு பல முன்னணி இயக்குனர்களின் படங்கள் பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனங்களையே குவித்து இருக்கிறது. பெரிய அளவில் ஸ்டார் இயக்குனர்கள் சறுக்கி இருக்கும் நிலையில் தற்போது இட்லி கடை மீது பெரிய அளவில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் நாளை ரிலீஸாக இருக்கும் இப்படத்திற்கு தனுஷ் 40 கோடி வரை மட்டுமே சம்பளமாக வாங்கி இருக்கிறாராம். சிவகார்த்திகேயன் தன்னுடைய பராசக்தி படத்துக்கு சம்பளத்தை விட வசூலில் பங்கு கேட்கும் அளவுக்கு சென்று இருக்கிறார்.
ஆனால் தனுஷ் இன்னமும் சம்பளத்தை கருத்தில் கொள்ளாமல் அதே அளவு வாங்குவதால் தான் அவருக்கு தொடர்ந்து இயக்குனர்கள் கதை சொல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிப்பட்டு வருகிறது.
