இளையராஜா பயோபிக்கை கிடப்பில் போட்ட தனுஷ்!.,. இதுக்கா இவ்வளவு பில்டப் கொடுத்தீங்க!..

by Murugan |   ( Updated:2024-10-09 14:30:45  )
dhanush
X

dhanush

Ilayaraja biopic: தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் நடிகர் தனுஷ். புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன், கர்ணன் போன்ற படங்களால் தன்னை பட்டை தீட்டிக்கொண்டவர். சில தேசிய விருதுகளையும் வாங்கி இருக்கிறார். தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்திய அளவில் உள்ள சிறந்த இயக்குனர்கள் தனுஷை வைத்து படமெடுக்க ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில்தான், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கையை படமாக எடுத்து அதில் தனுஷ் நடிக்க விரும்பினார். இளையராஜாவே இப்படத்தை தயாரிப்பது எனவும், இப்படத்தை கேப்டன் மில்லர் படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

கத்தி, கொலை, ரத்தம், துப்பாக்கி, வன்முறை என படமெடுக்கும் அருண் மாதேஸ்வரன் எப்படி இளையராஜா பயோபிக்கை எடுப்பார் என பலரும் முகம் சுழித்தனர். ஆனால், படக்குழு அதை கண்டுகொள்ளவில்லை. தோளில் ஆர்மோனிய பெட்டியை சுமந்தபடி தனுஷ் சென்னைக்குள் வருவது போல ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியானது.


அதன்பின், இளையராஜாவுடன் தனுஷுக்கும், அருண் மாதேஸ்வரனுக்கும் சில சந்திப்புகள் நடந்தது. அதன்பின் இந்த படம் பற்றி இதுவரை தகவல் வெளியாகவில்லை. இப்படத்தின் அறிவிப்பு இந்த வரும் மார்ச் மாதம் வெளியானது. 9 மாதங்களாகியும் படம் இன்னமும் துவங்கப்படவில்லை.

ராயன் படத்தை முடித்த தனுஷ் அவர் ஏற்கனவே இயக்கி கொண்டிருந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட வேலைகளை துவங்கினார். அந்த படம் முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது இட்லி கடை என்கிற புதிய படத்தை இயக்கி வருகிறார். ஒருபக்கம், தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த 3 படங்களும் முடிய எப்படியும் இன்னும் சில மாதங்கள் ஆகிவிடும் என்பதால் இளையராஜா பயோபிக் அடுத்த வருடம்தான் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story