தனுஷை அசிங்கப்படுத்திய நித்யா மேனன்… பதிலுக்கு இப்படியா ஷூட்டிங்கில் பண்ணுறது?

by Akhilan |
Nithya menon
X

Dhanush: நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இட்லிகடை படத்தில் நடிக்கும் நித்யா மேனனை சரியாக நடத்தாமல் இருப்பதாக அவரின் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முக்கிய படமாக அமைந்தது தனுஷ் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம். இப்படத்தில் இருவரின் நட்பும், காதலும் சொல்லி தேசிய விருதை தட்டி வந்தது. இப்படத்தினை தொடர்ந்து தற்போது இருவரும் இட்லிகடை படத்தில் நடித்து வருகிறார்.

பொதுவாக தனுஷ் மீது ஏகப்பட்ட விமர்சனம் குவியும் என்பது வழக்கம் தான். ஆனால் தற்போது மிகப்பெரிய ஒரு விஷயம் கசிந்துள்ளது. அதாவது நித்யா மேனன் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் ஏன் எப்போதுமே நடிகைகளை சரியாக நடத்தாமல் இருக்கிறீர்கள்.

அவர்களுக்கும் அங்கீகாரம் கொடுங்கள். ஒரு சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட டைரக்டருக்கு அடுத்து ஹீரோ தான் அங்கீகாரம் பெறுகிறார். நடிகைகள் அந்த படத்தினை தூக்கி நிறுத்தினால் கூட அது நடக்க மாட்டிங்குதே என ஆதங்கமாக பேசி இருக்கிறார்.

அந்த நிலையில் சமீபத்தில் தனுஷுன் இட்லிகடை படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில் தனுஷுடன் நித்யா மேனனும் இருந்தார். ஆனாலும் கூட அவரின் பெயர் போஸ்டரில் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. ஆனால் அந்த பிரச்னை அங்குடன் முடியவில்லை.

அதை தொடர்ந்து தனுஷ் மற்றும் அருண் விஜயின் போஸ்டர் வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில் தனுஷுடன் ஈடு செய்யும் அளவுக்கு அருண் விஜய் பெயர் இடம்பெற்று இருந்தது. இதனால் நித்யா மேனன் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டது நடிகர் தனுஷை தானாம்.

தேசிய விருது வாங்கிய நித்யா மேனன் தன்னுடன் நடிக்கும் போது தனுஷை அவரை அவமதிப்பது போல நடந்துக்கொள்வது தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த போஸ்டர்களும் தற்போது ரசிகர்களிடம் பகிரப்பட்டு வருகிறது.

Next Story