தமிழ் சினிமா உலகை இரண்டாக்கிய தனுஷ்!... ஒன்னுமே தெரியாத மாதிரி கூலா இருக்காரே!...

#image_title
Dhanush: நடிகர் தனுஷால் தமிழ் சினிமா உலகமே இரண்டாக பிளவு பட்டிருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?. உண்மையில் அது நடந்திருக்கிறது. ராயன் படத்தை முடித்த உடனேயே இட்லி கடை என்கிற படத்தை துவங்கினார் தனுஷ். சமீபகாலமாக பெரிய நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரித்து வந்தார். இப்போது வருமான வரி சோதனைக்கு பயந்து இவர் வெளிநாடு சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இட்லி கடை படப்பிடிப்பும் முழுவதுமாக முடியவில்லை.
தனுஷ் இட்லி கடை படத்தை துவங்கியதும் அவரை வைத்து பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தனுஷ் தன்னிடம் பல கோடிகள் அட்வானஸ் வாங்கிக்கொண்டு நடித்துகொடுக்காமல் இட்லி கடை படத்திற்கு போய்விட்டார் என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். அதேபோல், இராம.நாராயணனின் மகன் முரளியும் தனது பேனரில் தனுஷ் இயக்கி சில கோடிகள் முதலீடு செய்யப்பட்டு துவங்கப்பட்ட படம் ஒரே ஷெட்யூலோடு அப்படியே நிற்கிறது என புகார் சொன்னார்.
இந்த இரண்டு புகார்கள் தொடர்பாகவும் தயாரிப்பாளர் சங்கம் நடிகர் சங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், சுமூக முடிவு எட்டவில்லை. எனவே, இட்லி கடை படத்திற்கு திரைப்பட தொழிலாளர் சங்கம் (பெப்சி) ஆதரவு அளிக்கக் கூடாது என தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக்கொண்டது.
ஆனால், அரசியல் மேலிடம் சொன்னதால் இட்லி கடை படத்தில் பெப்சி ஊழியர்கள் வேலை செய்தார்கள். படப்பிடிப்பும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் பெப்சி அமைப்பிடம் தயாரிப்பாளர் சங்கம் கோபப்பட இரண்டு சங்கங்களுக்கும் மோதல் துவங்கியது. இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என பெப்சி யூனியன் அறிவித்தது.
இதானல் கோபமடைந்த தயாரிப்பாளர் சங்கம் பெப்சிக்கு மாற்றாக ஒரு புதிய தொழிலாளர் அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இதற்கு பெப்சி யூனியன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மொத்தத்தில் இட்லி கடை படத்தால் தமிழ் திரையுலகமே இரண்டாக பிரியும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், தனுஷோ எந்த கவலையும் இல்லாமல் திரைப்படங்களில் நடித்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.