தனுஷ் என்ன இந்த ஸ்பீடுல இருக்காரு… இதை எதிர்பார்க்கவே இல்லையே!...

Dhanush: கோலிவுட்டில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் குறித்த சுவாரசிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இயக்குனர் கஸ்தூரிராஜா மற்றும் பிரபல இயக்குனர் செல்வராகவன் குடும்பத்திலிருந்து நடிகராக வந்தவர் தான் தனுஷ். ஆனால் அவருக்கு முதல் படம் சுவாரசியமாக அமையவில்லை. அப்படத்தின் வெற்றி கதைக்காக மட்டுமே இருந்தது. இருந்தும் தனுஷ் தன்னுடைய நம்பிக்கையை கைவிடவில்லை.

அதைத்தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பால் அசதி இருப்பார். தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து கோலிவுட்டுக்குள் ஒரு இடத்தை பிடித்துவிட்டார். தற்போது இயக்குனராகவும் அசத்தி வருகிறார்.

இவர் இயக்கத்தில் இந்த வருடம் ராயன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2024ம் ஆண்டின் சிறந்த படம் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளது. தற்போது இளநடிகர்களை வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் தற்போது தனுஷின் இயக்கத்தில் 54வது படத்தினை இயக்கி நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு இட்லிகடை எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கி நடந்து வருகிறது.

இதுமட்டுமல்லாமல், சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நாகர்ஜூனா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் குபேரா ஷூட்டிங் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறதாம்.

இதை தொடர்ந்து இப்படத்தினை இந்த வருடம் டிசம்பரில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜனவரியில் கேப்டன் மில்லர், ஜூனில் ராயன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸான நிலையில் இது இந்த வருடத்தின் மூன்றாவது படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles
Next Story
Share it